Pages

Saturday, April 27, 2013

மறுபடியும்



மறுபடியும் இந்த ப்ளாகில் எழுதலாம் என்று

முடிவு செய்து விட்டேன். இனி உங்களை
யாராலும் காப்பாற்ற .முடியாது .. 

கிட்டத்தட்ட இதில் எழுதி ஒரு வருடம் முடியப்போகிறது 
சொல்லப்போனால் எனக்கே தெரியாத coincidence 
நான் இந்த ப்ளாகை பிரசவித்தது போன வருடம் இதே சமயத்தில் தான் 
இந்த ஒரு வருடத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன 
(எல்லாத்தையும் சொல்லுவேன்னு பாத்தீங்களா?). All is well. 

ஒரு சின்ன கவிதை 

எழுதச் சொல்வது என்ன 
அங்கே ஒளிந்திருக்கும் 
அரை பிறை நிலவா 
அரை அங்குலச் சிரிப்பில் 
ஓரமாய்ப் படுத்திருக்கும் குழந்தையா
தலைக்கு மேல் ஏறியிருக்கும் 
செய்யக் காத்திருக்கும் வேலைச் சுமையா, காதலா 
உடன்பட்டோருக்குச் செய்யத் தூண்டும் கடமையா 
உலகச் சேவை சமுதாயச் சேவை என்றெல்லாம் 
வேசி வார்த்தை சொல்ல மாட்டேன், 
அதன் பொய்யே எனைப் பார்த்துச் 
சிரித்துச் செல்லுமெனதால் 
எதையாவது எழுதித் தொலை என எகத்தாளம் 
பேசும் தூக்கம் சொருகியிருக்கும் கண்களா 
இப்படி எதுவுமில்லை 
கொஞ்சம் டீயும் இளையராஜா பாடலும் 
கேட்டால் தானால் தூங்கப் போகும் உங்களில் 
தற்குறி தான் நான் ... 
என்னை எழுதத் தூண்டுவது ஒன்றே ஒன்று தான் 
அது என்ன வென்றால் 
... எதையாவது கற்பனை செய்து விட்டு போங்கள் 
நான் தூங்கப் ..போகிறேன் . 



No comments:

Post a Comment