1) நிறைய மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு வரம் என்று தான்
சொல்ல வேண்டும். அது வெவ்வேறு மாநில பாஷையாக இருக்க
வேண்டுமென்பதில்லை, நம்மூர் போல "தா ... நாஷ்டா ... குஷ்ணுக்கிறேன் "
சென்னை பாஷையும், "அவிங்க இவிங்க" மதுரை பாஷையும், "லே" நெல்லையும்
"டே"நாகர்கோவிலும் "னுங்கோ" தர்மபுரியும், "இல்லீங்" கோவை பாஷையும்
என்று மாவட்ட ரீதியாகப் பேசும்தமிழையே கூடச் சொல்லலாம். எனக்கு
இதில் மிகவும் பிடித்தது நாகர்கோவில் மற்றும் கோவை பாஷை தான்.
கோவைத்தமிழில் இயல்பான மரியாதை கலந்த அன்பு இருப்பதாகத்
தோன்றுகிறது (என் சொந்த ஊரும் அது தான்). திடீரென்று எதோ ஒரு
பஸ்சிற்காக, ரயிலிற்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆரவாரம்
மற்றும் எச்சரிக்கை உணர்வு உந்த அருகில் இருப்பவரிடம் "வண்டி வந்திடுச்சுங்களா?"
என்று எனக்கும் அறியாமல் இழுத்த தொனி கலந்து கேக்கும் பொது எதோ ஒரு ஆதி காலத்து
செல்லில் புதைந்திருக்கும் எனது கோவை ஜீன் வெளிப்படுகிறதோ என்னவோ
எதிர் பார்ட்டியும் கோவை என்றால், ஜில்பான்ஸ் தான் ... "ஏனுங், நமக்கும் கொய்ம்தூர்ங்களா?"
என்று மிக எளிமையாய் வெள்ளந்தியாய்க் கேட்கும் போது நீங்கள் எதியோப்பாவாக
இருந்தாலும் "ஆமாங்":என்று தான் சொல்லாத் தோன்றும். ஆனால் நான்
எதியோப்பா இல்லை ... 2nd ஜெனரேஷன் சென்னைக் கோவையன் .... "இல்லீங், ஆமாங்"
தாண்டி, நான் எது பேசினாலும், இவன் கோவை இல்லை என் சிறுவாணித் தண்ணீர்
தாண்டி, நான் எது பேசினாலும், இவன் கோவை இல்லை என் சிறுவாணித் தண்ணீர்
மீது சத்தியம் செய்யலாம்.என்ன செய்வது, உள்ளுக்குள் ஓடுவது சென்னை
போர்வல் தண்ணீராயிற்றே ...கண்டிப்பாகக் கூடிய விரைவில் கோவைத் தமிழ் கற்றுக் கொள்ள
வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
காதலுக்கு மொழி தேவை இல்லையாம்
முத்தத்திற்கு ஏது மொழி
உடல் ஸ்பரிசத்திற்கு எது மொழி
குழந்தை சிரிப்பில் என்ன மொழி
கடல் சலசலப்பில் என்ன மொழி
வயோதிகர் கண்ணீரில் என்ன மொழி
புதிதாய் வயதிற்கு வந்த பெண்ணின் வெட்கத்தில் என்ன மொழி
காமத்தின் உச்சத்தில் வரும் மொழி என்ன மொழி
யாசகன் கண்ணில் தெரியும் ஏக்கத்தில் என்ன மொழி
தாயன்பின் அடர்த்தியில் சொன்ன மொழி என்ன மொழி
இப்படி எல்லா மொழியும் வார்த்தை நீர்த்துப் போனால்,
மொழிக்கு வார்த்தை வேண்டாமென்றால்
ஏன் மனிதர் நாக்கை மட்டும் வேறு விதமாய்ப் படைத்தான்?
2) நிறைய பேருக்கு ஹே ராம் படத்தில் வரும் 'நீ பார்த்த' மற்றும் 'இசையில் தொடங்குதம்மா'
பாடல்கள் தான் பரிச்சயம். உம்மாச்சி குத்தம் பண்ணும் இந்த சீன் எவ்வளவு பேருக்குத்
தெரியும் என்று தெரியவில்லை. படத்தில் இந்த காட்சி மிக முக்கியமான சீனில் வரும்.
சாகேத் ராம் சம்சார வாழ்வை விட்டொழித்து காந்தியைக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார்
அதற்கு முன்பு அவருக்கும் மைதிலிக்கும் இடையே நடக்கும் சாரீர சம்பந்த வைபோக்கதில் வரும்
BGM தான் இது. இதில் பெண்ணிற்கும் துப்பாக்கிக்கும் கமல் (இயக்குனர்) correlation
செய்திருப்பார். சொல்லப்போனால் இதற்காகவே இந்தப படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படவில்லை
என்றும் சொல்லக் கேள்வி.
கேட்டு என்ஜாய் பண்ணுங்கள். நான் சொன்ன அந்த BGM 0:00 முதல் 1:18 வரை.
3) உங்களில் எவ்வளவு பேர் நம்பிக்கை துரோகத்தைத் தாண்டி வந்திருப்பீர்கள்.
என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை துரோகத்தை அனுபவிக்காதவன் ஒரு
முழு மனிதனே கிடையாது. உங்களுக்கு மிக நெருங்கிய சொந்தமோ நெருங்கிய
நண்பரோ உங்களுக்கு துரோகம் செய்தால் எப்படி உணர்வீர்கள். என்னைப் பொறுத்தவரை
அது ஆரம்பத்தில் மிகக் கொடுமையாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு வாழ்விற்கான
உண்மை புதைந்திருக்கும். சில சமயங்களில் நிலையாமையை அறுத்து உங்களை உங்களுக்கு
வெளிச்சம்போட்டுக் காட்டும் வல்லமை இதற்கு உண்டு. அனுபவித்துப் பாருங்கள் தெரியும்.
ஒரு பேமஸ் ஆங்கில பழமொழி உண்டு
Every betrayal contains a perfect moment, a coin stamped heads or tails with salvation on the other side
So true ...
4) சமீபத்தில் தான் zoomusicology பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டேன்.
மிகவும் சுவாரசியமான சப்ஜக்ட். விலங்குகள் எழுப்பும் சத்தத்தை வைத்து
அதன் உணர்வையும் மொழியையும் விளக்கும் கலை அல்லது அறிவியல் அது.
நேற்று ஹிந்துவில் கூட இதைப் பற்றி வந்துள்ளது.
5) நேரில் பார்க்கும் போதோ அல்லது போனில் பேசும் போதோ
நண்பர்கள் நான் facebook அல்லது எனது ப்ளாகில் எழுதும் (உலரும்/பிதற்றும்/கிறுக்கும்)
கவிதை/கட்டுரை பற்றிக் கேட்கிறார்கள் ஆனால் யாரும் தானாக முன்வந்து
like, comment போடுவதில்லையே என்று ரூம் போடாமல் தீர்க்கமாய் பத்து நிமிடம் யோசித்தேன்.
அதன் முடிவு .இதோ ..
இந்த விஷயத்தை 2 bit binary நம்பர் மூலமாக அணுகலாம்
அதாவது D1 D0.
D1 என்றால் படிப்பவர்கள் (உங்களைப் போல). D0 என்றால் பிடிப்பவர்கள்.
முதல் வகை D1 = 0, D0 = 0.
அதாவது நான் ஒரு விஷயத்தை facebook அல்லது ப்ளாகில் எழுதி
அதை ஒரு முறை கூட விசிட் செய்யாதவர்கள், அதனால் லைக் போடாதவர்கள்
இந்த வகை எவ்வளவு என்று தெரியவில்லை.சுருக்கமாக "படிக் காமல் பிடிக்காது" வகை.
இரண்டாவது வகை D1 = 0, D0 = 1
இந்த வகை மக்கள் நான் என்ன கிறுக்கினாலும் லைக் போடுபவர்கள்
முக்கால் வாசி நேரம் இரண்டு அல்லது மூன்று பேர் தான். இவர்கள் அதனை
படித்தார்களா என்று கூட தெரியாது. இவர்களுக்கு எழுதிய content'ஐ விட என்னை தான் பிடிக்கும்.
சுருக்கமாக "படிக்காமல் பிடிக்கும்" வகை.
மூன்றாவது வகை D1 = 1, D0 = 0
இந்த வகை ஆட்கள் தான் மற்ற மூன்றை விட அதிகம் அதாவது படித்திருந்தாலும்
லைக் அல்லது கமண்ட் போடாத வகை. இவர்களில் எவ்வளவு பேருக்கு கவிதைக்காகக்
கவிதை பிடிக்கவில்லை எவ்வளவு பேருக்கு என்னைப் பிடிக்காததால் கவிதையும்
பிடிக்கவில்லை என்று பிரிப்பது கஷ்டம். "படித்தும் பிடிக்காது" வகை I want to interpret latter to be more pragmatic.
நான்காவது வகை D1 = 1 D0 = 1
"படித்துப் பிடித்த" வகை, இப்போதைக்கு இதில் நான் மட்டுமே இருக்கிறேன் .
அடக்கம் காரணமாக இந்த வகையை மேலும் ஆராயவில்லை LOL