Pages

Monday, June 24, 2013

அனுபவங்கள்


ரொம்ப நாளாகி விட்டது இங்கே எழுதி. உண்மையாகவே நிறைய நண்பர்கள் 
கேட்டதற்கிணங்க, மறுபடியும் எழுதுகிறேன் ... இடையில் இங்கு  எழுதாததற்குக் 
காரணம் ரொம்ப பிசி தான். சரி ஆனது .ஆச்சு ... ஒரு அஞ்சு நிமிஷம் படித்துத் தொலையவும் .. 

********************************************************************


1) இமாலயச்  சுனாமி என்று சொல்லப்பட்ட கோரத்தாண்டவம் தான் 
    ரொம்பவும்  pre-occupied ஆகக் கடைசி ஒருவார இரவைத் தள்ளவைத்தது 
     அதிலும் ரொம்பக் கொடுமை இதை வைத்து அரங்கேறும் அரசியல் தான். 

     "india in pain; pappu in spain" என்று facebook இல் யாரோ சொன்னது மிகவும் apt. 
     VVIP வந்ததால் நிவாரண உதவி தடைபடுகிறது என்பது இப்போது தான், 
     நமோ வந்ததற்குப் பிறகு தான் இவர்களுக்குக் கண்ணிற்குத் தெரிகிறது. 
     மன்மோகனும் மேடமும் ஹெலிகாப்டரில் இருந்து வாழ்வே மாயம் 
     படத்தில் கமலும் ஸ்ரீதேவியும் போல பைனாக்குலரில் இருந்து பார்த்து விட்டுச் 
     .சென்றார்கள் .. அப்போது .தெரியவில்லை .. சரி அவர்கள் தான் வந்து மேலே 
     இருந்து பார்த்து விட்டுப் போய்  விட்டார்களே .. அப்பாடா ...எல்லாப் பிரச்சனையும் .தீர்ந்தது .. 
     டேய் மச்சான் ... ஒரு டீ சொல்லேன் .. 

     Joke apart. இதில் கண்டிப்பாகப் பாராட்டப் படவேண்டியவர் நால்வர் 


     இங்கே தென்னிந்தியாவில் அண்டை மாநிலங்களுடன் பங்காளிச் சண்டை 
     போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,மோடி, தானே படையுடன் சென்று உதவி 
     புரிவது win-win என்று தான் சொல்லவேண்டும். என்ன தான் நமோ சூப்பர் என்றாலும் 
     இதில் கண்டிப்பாக சுயநலம் இல்லாமல் .இல்லை .. சொல்லப்போனால் நாம்  எல்லாருமே   
     சுயநலவாதிகள் தானே ... நம் அலுவலகத்தில் நாம் தான் அப்பாட்டக்கர் என்று நாம் ஒவ்வொருவரும்    
     பெயர் வாங்கி இருந்தாலும் அடுத்த ப்ரமோஷன் செய்யவேண்டுமானால் ஏதாவது  
     சேவை மையத்திற்குச் சென்று community service செய்ய வேண்டும் என்று prerequisite 
     இருந்தால், நாம் என்ன செய்யாமலா .இருப்போம் .. இதுவும் அப்படித்தான் ... 

    
     அடுத்து பாராட்டப் படவேண்டியது நம் முதல்வர். மீட்புக் குழுவை அனுப்பி அங்கு சென்று 
      மாட்டிக் கொண்ட பக்தர்கள்/சுற்றுலாப் பயணிகளை பத்திரமாய் இலவசமாய் மீட்டுக் 
      கூட்டி வந்தது பாராட்டத்தக்கது. 

     "Jeya in state + NaMo in central" ... பார்ப்போம் கலாம் சொன்னது போல இந்த கூட்டணி அமைந்தால் 
      (இரண்டு பெரும் அதற்குத் தொடர்ந்து இரண்டு முறைஜெயித்தாக வேண்டும்) கண்டிப்பாக வல்லரசு தான் ... 

      அடுத்து ராணுவம். No word ... awesomeness to the core.



      அடுத்து பாராட்டப்படவேண்டியவர்கள் .... நீங்கள் தான் ... இந்த ப்ளாகிற்கு வந்திருக்கிறீர்களே 

     கடைசியாக ஒன்று சொல்ல விருப்பம். நான் சாஷ்டாங்க, ஆதர்ஷ, ஆத்மார்த்தமான வைஷ்ணவன் 
     சொல்லப்போனால் இதுவரை சிவன் கோவிலுக்கு ஒன்றிரு முறை தான் சென்றிருப்பேன் 
     ஆனால் இந்த படத்தைப் பார்த்தவுடன் எதோ ஒரு உலக உண்மை மற்றும் தத்துவம் இருப்பது   
      போல மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோன்றுகிறது .... மொக்ஷக் கடவுளான சிவன் 
     தன தலையில் சுமந்திருக்கும் கங்கையால் தீர்த்தமாடப் படுகிறார் ... வியட்நாம் போர் 
     முடிவுற்கு வந்ததற்குக் காரணமா புகைப்படம் போல, என்னையும் இந்த புகைப்படம் என்னவோ செய்கிறது .... 
      ஓம் நமோ நாராயணாய ... ஓம் நமச் சிவாய ... 
 


வெள்ளத்திற்கு முன் ... 






வெள்ளத்தின் போது 



Just see the difference .... too much man !!!



      இந்த நேரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமமும், சமகமும் சொல்வோம் ... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 
      கொஞ்சம் கண்ணீரும் நிறைய வேண்டுதலும் செய்வோம் ... 








      இந்த நேரத்தில் இந்த நிகழ்வை வைத்து ஒரு political thriller எழுதலாம் என்ற சுயநல எண்ணமும், கதையும்    
      தோன்றியுள்ளது ... கூடிய சீக்கிரம் எழுதப் போகிறேன், MGM/20th century Fox எல்லாரும் பில்லியன் 
      டாலர் செக்குடன் தயாராக .இருங்கள் ... 



********************************************************************



2) இந்த வீடியோ வாழ்வின் எந்த நிலையிலும் பொருந்தும்  ...self explanatory, see and relish. 





********************************************************************

    

3) மற்றும் ஒரு சுய பகிர்வுப் புகைப்படம் ... This is How Modi is portrayed by his critics ... 




********************************************************************



4) மீண்டும் டோனி தான் ஒரு பில்கின்ஹ்ஜாராஸ் என்று நிரூபித்துவிட்டார் .. 




     
    இந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபிக்கும் 1985 வேர்ல்ட் சாம்பியான்ஷிப்பிற்கும் நிறைய .ஒற்றுமை .

    a) இரண்டையும் இந்தியா தான் வென்றது 

    b​) இரண்டிற்கும் சரியாக இரண்டாண்டிற்கு முன் தான் இந்திய உலகக் கோப்பையை வென்றது. (1983 அண்ட் 2011) 

    c) இரண்டு டொர்னமெண்டும் இது தான் கடைசி (1985 அண்ட் 2013) 

    e) இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் 
        திடீரென்று உருவான ஒப்பனர்ஸ் (சாஸ்திரி/ஸ்ரீகாந்த் - தவான்/
        ரோஹித் ஷர்மா).  இரண்டு pair இலும் மற்றொரு ஒற்றுமை உண்டு    
        ... அதை வெளியில் சொன்னால் என்னை மதச்சார்பின்மை 
        அற்றவன் என்று சொல்லி லோக் சபா தேர்தலில் எனக்கு உளுந்தூர்பேட்டை நாடாளுமன்றத் தொகுதியில் 
வாக்களிக்க மாட்டார்கள் ... ஏன் வம்பு ... 


    f) இரண்டும் இந்தியாவிற்குச் சவாலான நாட்டில் தான் நடந்தது (ஆஸ்ட்ரேலியா/இங்கிலாந்த்) 

    g) இரண்டிலும் ரவி என்று ஆரம்பிக்கும் ஆல்ரௌண்டரின் பங்கு முக்கியம், மேலும் அவர் தான் தொடர் .நாயகன் .. (ரவி சாஸ்திரி ரவீந்திர ஜடேஜா) 

    h) இரண்டிலும் spin duo வின் பங்கு மிக முக்கியம் (ரவி சாஸ்திரி/சிவராம கிருஷ்ணன் - ரவீந்திர ஜடேஜா/அஷ்வின் )

    j) இரண்டிலும் பைனல்ஸில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரின் பங்கு மிக முக்கியம் (சிவ ராம கிருஷ்ணன்/அஷ்வின்) 

    k) இரண்டிலும் புதிதாய் ஒரு விக்கட் கீப்பர் கலக்கினார் (சதானந்த் விஸ்வநாத்/தினேஷ் கார்த்திக்) 

    l) இரண்டிலும் ஷர்மா என்கிற மொக்கை வேகப் பந்து வீச்சாளர் திடீரென்று கலக்கி இருப்பார் ... (சேத்தன் ஷர்மா/இஷாந்த் ஷர்மா )

    Last but not the least ஒற்றுமை  ... இரண்டைப் பற்றியும் சம்பந்தா சம்பந்தில்லாமல் சம்பந்தத்துடன் சம்பந்தமாய் சம்பந்தப்படுத்தி 
    மொக்கை போடும் ஒரே ஆள் நான் தான் 


********************************************************************



5) வழக்கமாக ரஹ்மானின் பாடல்கள் தனுஷ் போல ... கேட்டவுடன்பிடிக்காது ... கேட்கக் கேட்க தான் பிடிக்கும் .. 
    ஆனால் ரீசண்டாய் வந்த அவரின் ராஞ்ச்ஹானா பாடல்கள் கௌதம் மேனன் மாதிரி ... முதலில் ரொம்பவும் பிடித்தது .. 
    இப்போது அலுத்து .விட்டது .. 



********************************************************************



6) சன் டிவியில் வரும் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சி மிக யதார்த்தமாய், நெருடல் இல்லாமல், 
    கொலை வெறி ரணகலமில்லாமல் செல்கிறது. 

    

********************************************************************


7) திடீரென்று ரஹ்மான் மற்றும் ராஜாவின் இந்த இரண்டு பாடல்களை ஒரே நாளில் ரொம்ப நாள் கழித்துக் 
    கேட்டேன் . 
 
    Legendary stuffs ... 






********************************************************************



8) இந்த ராஜ்ஜிய சபா தேர்தல் ஜிப்பா ..சூப்பர்


   எனக்கு ஒரு .சந்தேகம் .. (கணேஷ் ராம் மன்னிப்பாராக) 

   ஏன் எல்லாரும் விழுந்து அடித்துக் கொண்டு, குட்டிக்கரணம் போட்டுக் கொண்டு    
   இப்படி குதிரை/கழுதை/நாய்/நரி பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
  
    மக்கள் சேவையில் அவ்வளவு விருப்பமா???

   ஆனால் ... இதில் சிரிப்பு போலீஸ் நம்ம காப்டன் தான் ... 



********************************************************************



9) இந்த கவிதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


    நான் இறந்த பின் 
    என்னுடன் சேர்ந்து கொண்டு 
    கோரசாய் ஒய்யாரமாய் 
    ஓலமிட்டு ஒப்பாரி பாட        
    யாருண்டு என நினைக்கையில்    
    நெகிழ்கிறேன் ... அழுகிறேன் ... சிரிக்கிறேன் 
    கை விட்டு எண்ணி விடலாம் 
    விரல் விடாமல் எண்ணி விடலாம் 
    இதை எண்ணி எண்ணி ... 
    விரல் விட்டு எண்ணி எண்ணி 
    என்ன செய்யப் போகிறேன் 
    நான் தான் இறந்து விட்டேனே 
    நேற்றே 



    எழுதியவர் யார் என்று முடிந்தால் கண்டு பிடிங்கள் பார்ப்போம் ... 



********************************************************************



10) நன்றி மீண்டும் வருக  ... போகும் முன் கொஞ்சம் லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் போட்டால் நீங்கள் நினைக்கும் எதுவும் நடக்கும் என்று 
நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள், எனக்காகவும் என்னுடன் 
சேர்ந்து கொண்டு ..... 



********************************************************************






Monday, June 10, 2013

சுயம்

சோகங்கள் எல்லாருக்கும் பொது உண்டு 
சிங்காரச்சீமாட்டியாய் நாளொரு மேனி 
சிரித்து ரசித்து வாழ இது சொர்க்கம் இல்லை 
மரணங்கள் என்னை நெருங்கினால் 
மற்றுமொருமுறை என எண்ணிக் கொள்வேன் 
அதை எண் வைத்து எண்ணிக் கொள்வேன் 
எண்ணிக் கொல்வேன் 
என்னைக் கொள்வேன் 
இது என்னுடன் போகட்டும் என 
தங்க முலாம் பூசத் தேவை இல்லை 
நானும் ஒரு சமுதாய வேசி தான் 
சீர்கெட்டுக் கிடக்கும் சாக்கடையில் ஓரங்களில் 
என் டீக் கடையும் உண்டு 
அங்கு தினம் ஒரு மரணம் எனக்குண்டு 
நேற்றோர் முறை 
அன்றும் அப்படித்தான் 
நாளை பின் மற்றொரு நாள் 
எல்லா நாளும் மரணங்கள் என்னை நோக்கி 
தானாய்ச் சபலமிட்டு வரும் 
நான் கூப்பிடத் தேவையில்லை 
அதை வியந்து பயப்படுவதும் இல்லை 
வாழ்வின் அது தினசரி 
தனி மனித சோகங்கள் வியாபாரமானால் 
ஒவ்வொரு குடிசையிலும் 
ஓராயிரம் ஆஸ்கர்கள் 
அதை உள்ளேயே பூட்டிப் போட்டி 
தினம் அதற்கும் இதற்கும் 
சன்னமாய் ஆற்றாமை பூஜை செய்து 
அச்சம் கொண்டு அசைபோடும் 
மற்றும் ஒரு மானிடன் தான் இவனும் 
இவன் புதியன் அல்லன் 
எல்லாரும் சுவாசிக்கும் ஏக்கக் காற்றில் 
நானும் ஒரு தூசிக் காற்றை விடுகிறேன் 
மற்றையன் தூசியை நுகர்கிறேன் 
உன் தாபங்களும் விரக்திகளும் சோகங்களும் 
சஞ்சலங்களும், துக்கங்களும், வேட்கைகளும் 
என்னை ஒன்னும் செய்வதில்லை 
நான் அதைப் போல இன்னும் பல உணர்சிகளை 
மரணம் தாண்டி சென்று சுவாசித்து வருவதால் 
நல்ல நாடகத்தின் மத்தியில் திரை போட்டால் 
எழுந்து போய் டீ சாப்பிடலாம் 
இங்கு திரைகள் நித்தமும் உண்டு 
கிழிகிறது உள்ளே நாடகத்தில் ஒன்றுமில்லை 
எழுதியதைப் படித்து கண்ணீர் விட 
இது வாக்குமூலம் இல்லை 
இது வெறும் குரல் 
அட்டைகள் உறிஞ்சி மீதி வைக்கும் 
அசைந்து செல்லும் ரத்தஓட்டங்கள் போல 
மரணங்கள் தொட்டுச் சென்ற 
மிச்ச சொட்டு உடம்பில் 
மீள் சோகங்கள் எச்சம் மோல  
அங்குமிங்கும் ஓடுகிறது இதோ இதில் 
பாசாங்காய் மற்றுமொருமுறை வேறொரு கவிதையில் 
வேறொரு நடப்பினைச் சொல்லலாம் 
பொருள் வேறானாலும் 
நடை வேறானாலும் 
ஆதாரம்அன்றாடச் சடங்குகள் தொட்டுச் சென்ற கழிவு
அதை ஆராயும் பக்குவம் அதிலும் உண்டு 
ஆறாத் துயர்களின் ஊடே 
சத்தங்கள் இன்றி 
ரத்தங்கள் இன்றி 
சிறிது தன்னைத்தானே 
சுகித்து சுயபச்சாதாபம் கொண்டு 
சுயத்தைக் காமுற்று 
கழிவிரக்கம் அணைத்து சொந்தமாய் 
முத்தமிடும் கைகளில் புறப்படும் 
இன்னும் நிறைய கிறுக்கல்கள் ... 

******************************

அதிகாலை அதிர்ஷ்டக் காற்றில் 
அசைந்து மிதந்து வரும் 
ஆடும் ஆடல் புறாக்கள் 
மொட்டை மாடிச் சுவற்றில் 
காலையின் அதிசயம் 
அருகில் வந்து 
எத்தனமாய் ஒரு மதில் பார்வை 
பின் வேலை முடிந்ததென 
அயர்ச்சியாய் தினசரியை நோக்கி மறுபயணம் 
நேற்று பார்த்தேன் ... இன்றும் பார்க்கிறேன் 
நாளையும் பார்ப்பேன் 

******************************

இந்த உலகத்திற்கு வணக்கம் 
வா இங்கொரு நாள் இருந்து பார் 
உன் வெற்றிகள் மற்றவரை பொறாமைப்படவைக்கும் 
அதை உன் திமிர் எனச் சொல்லவும் செய்யும்  
உன் தோல்விகள் பிரகடனப் படுத்தப்படும் 
உன் முடிவுகள் சிலரால் நிர்ணயம் செய்யப்படும் 
உன் கோபங்கள்முன்கோபம் என மாற்றிப்பேசப்படும் 
உன் சிரிப்புகள் ஏளனம் என ஏலனப்படுத்தப்படும் 
உன் வாதங்கள் விதண்டா வாதம் எனக் கருதப்படும் 
உன் மவுனங்கள் உன் பேதைமை என மாற்றப்படும் 
உன் சோகங்கள் பலருக்கு பாயசம் தரும் 
உன் வீர முழக்கங்கள் சிலருக்கு ஒப்பாரி எனவாகும் 
உன் நியாயங்கள் அயோக்கியத்தனம் என் உருவெடுக்கப்படும் 
உன் கண்ணீருக்கு சாயம் பூசப்படும் 
உன் வியர்வைக்கு துர்நாற்றம் வீசப்படும் 
நீ மற்றவருக்காக வாழ்ந்தால் ஏமாளி என்பர் 
நீ நீயாக இருந்தால் திமிர் பிடித்தவன் என்பர் 
வா இங்கொரு நாள் இருந்து பார் 
இந்த உலகத்திற்கு வணக்கம் 

******************************

நாளொரு சொந்தங்கள் நலிந்த பந்தங்கள் 
விகுதி மிகுத்த சார்புகள் 
அசுவம் ஏறிப் பயணப்படும் சுமைகள் 
தொந்தரவென விட்டொழிக்க ஒழியா கடமைகள் 
சல்லடை போல் நாளும் உடையும் சேர்ப்புகள் 
இவ்வகை அவ்வகை என பிரித்து மாளாத பொறுப்புகள் 
நிம்மதி இதுவென் வகுத்துப் பார்க்க முடியாத தூங்கா இரவுகள் 
உண்மை இது தான் என அருதியித முடியாத வம்புக் குழப்பங்கள் 
சஞ்சலம் சார்ந்த சிந்தனைகள் 
என் மனம் இதுவென புரிய வைக்க முடியா சூழல்கள் 
உன் மனம் எதுசொல்லெனக் கேட்க முடியா நேரங்கள் 
தூங்கித் தொலையலாம் என்றால் வந்து விரட்டும் ராட்சசக் கனவுகள் 
எனக்கு முன் பயணப்பட்டு அங்கு வந்த 
பெரிய அண்ணன்கள் அக்காள்கள் சொல்லக் கேள்வி 
கேள்வி ஞான அனுபவஸ்தன் என்னைப் பார் 
நான் உருவாக்கப்படாத உன் சிசு 
தந்தையே வேண்டாம் சொல்கிறேன் கேள் 
தயக்கமின்றி கலக்கமின்றி குழப்பமின்றி வெட்கமின்றி 
வீட்டிற்குப் போகும் முன் மெடிக்கல் ஷாப்பில் 
விரும்பி மறக்காது வாங்கிடு அதனை 
கத்தியின்றி ரத்தமின்றி நடக்கட்டும் கிரிசைகள் 
இப்போதைக்கு ஆளை விடு 
நான் வேறு ஜன்மத்தில் வந்து பிறக்கிறேன் 

******************************

ஈரம் இங்கல்ல இது ஒரு கல் 
மேல் அடித்த நுரைகள் எல்லாம் அத்துப்படி 
நகர்வதில்லை இது ஒரு கல் 
நாணல் கோணல்கல்களுக்கு வளைவதில்லை 
லேசாய் இது ஒரு கல் 
நண்டு சிண்டு பூசிகள் செய்யும் 
நகாசு நர்த்தனங்கள் எடுபடுவதில்லை 
எளிதில் இது ஒரு கல் 
காலம் கடக்கட்டும் 
தட்ப நிலை வெப்பம் மழை மாறட்டும் 
நிகழ் மாறட்டும் 
அசையாது இது ஒரு கல் 
அசைத்துப் பார்ப்பது வீண்
இது ஒரு கல் 
இது கல் என்று சொல்லும் நெஞ்சம் 
அது ஒரு கல் 

******************************

சுருதி பேதம் தாங்கிக் கொள்ளாத இதயம் 
சுகந்தமற்ற அனுபவங்களைத் தாங்குகிறது 
நிரந்தரம் எதுவெனத் தெரியாத 
ஓராயிரம் நித்திரைகளில் 
தவித்துத் தயங்கும் மனது 
ஏதோ ஒரு நாளில் 
ஒரு நேரத்தில் 
ஒரு இடத்தில் 
ஒளித்து வைத்திருக்கும் 
ஓராயிரம் திருப்தி இன்பங்கள் நோக்கி 
ஏதுமற்ற நாடோடியாய் 
அந்த நேரம் இடம், காலம் 
எதுவெனப் புரியாது 
உடுக்கை கை இழந்த மேனியில் 
உறக்கம் தேடி அலைவதில் தான் உள்ளதா 
இந்த வாழ்வின் தேடல் ரகசியம்? 

******************************

இறந்தவர்க்கு இரங்கல் மடல்கள் 
வந்து குவியட்டும் 
உட்கார்ந்து எண்ணுகிறேன் 
பார்க்கிறேன் எத்தனை வருகை 
நினைத்தவர், மறக்க முடியாதவர், 
நினைத்து அழுபவர், 
சுடுகாட்டிற்கு வராதவர்,
தவறியும் கண்ணீர் சிந்தாதவர் 
முதலைக் கண்ணீர் சிந்துபவர், 
உயில் தேடிச் செல்பவர், 
என் சட்டைப் பாக்கட்டில் மிச்சப் பணம் தேடுபவர்
வரட்டும் எல்லாரும் 
கை விட்டு எண்ணுகிறேன் 
மனம் விட்டு எண்ணுகிறேன் 
இருந்தவன் செய்ததை 
இறந்தவன் அறுவடை செய்கிறேன் 
இருத்தல்இறத்தல் ரெண்டும் எதிர்மறை இல்லை 
புரிகிறதின்று காலம் கடந்து 
எழுவாய் பயனிலை போல 
நான் எண்ணின் நேற்றைய நிஜத்தின் 
இன்றைய நிகழ் ... நகல் அல்ல நிஜம் 
நானும் என் ஆன்மாவும் மிச்சங்கள் 
இனி தோல் மேல் அதன் தோல் மேல் போட்டு 
மீதிப் பயணங்கள் வராத கண்ணீருடன் ... 

******************************

Wednesday, May 15, 2013

கவிதைகள்


ஈரம் சொட்டச் சொட்ட உன் பூவிதழ்களின் 
ரீங்காரச் சிவப்பில் நான் வைத்த 
முதல் முத்தங்கள் நினைவிருக்கிறதா 
உன் அம்மாவுக்குத் தெரியாமல் 
உன் வீட்டு வலை பீரோவின் கதவுக்குப் பின்னால் 
ஒளிந்து நாம் அப்பா அம்மா விளையாட்டு 
ஆடியது நினைவிருக்கிறதா?
எதற்கும் இருக்கட்டும் என இரண்டு குடைகள் 
கொண்டு வந்தும் ஒன்றை மடக்கி 
மற்றொன்றில் நம்மைச் சொருகி அந்த மழை இரவில் 
இடுப்புகள் உரச கைப்பற்றி நடந்தது நினைவிருக்கிறதா? 
உன் பிறந்த நாள் இரவில் உனக்காகவே பரிபூரணமாய் 
உன்னுடன் முகத்தோடு முகம் வைத்துச் சிரித்துப் 
பின் மறைந்தது நினைவிருக்கிறதா? 
நாம் சேர்ந்து சென்ற பாதைகளில் இன்று நீ மட்டும் 
தனியாய் நடக்கும் போது நாம் சென்றது நினைவிருக்கிறதா? 
நீ ஒழிந்து நான் ஒழிந்து நாமாக அந்த ஓர் இரவில் 
காட்டேஜில் குழந்தையாய்ப் பிறந்திருந்தது நினைவிருக்கிறதா? 
என்னை நினைவிருக்கிறதா?
என் நினைவுகள் நினைவிருக்கிறதா?
இது எதுவும் நினைவில் இல்லையா? 
இந்த இருபத்தி ஏழு வருடங்களில் 
ஒரு முறை கூட என் ஞாபகம் வரவில்லையா? 
நான் யாரென்று கூட நினைவில்லையா? 
கண்டிப்பாக இல்லையா? 
அப்படி என்றால் வா சம்பந்தி ஆவோம்
என் மகள் உன் மகனைத்தான் கட்டுவாளாம் .. 


**************************************************************************************

கவலை அற்ற காந்தம் புரைய
தேடல் ஒன்றே இல்லையென 
பார்க்கும் இரும்பை இறுகிக் கட்டியணைக்க 
நானுண்டு, மற்றே என்னால் வசியப்படும் 
இரும்புகளின் துருக்களைத்  துடைப்பதில், 
சாமங்கள் கழிவதில் இருளுக்கொரு வருத்தமில்லை - 
காரணமெனின்,  என்னால் கழிக்கப்படும் இந்த 
கற்புடைய அதிகாலைப் பனித் தூக்கத்தின் நிசப்தத்தின் 
ஊடே இனி தானே தன்னை இளைப்பாற்றிக் கொள்ளும்

**************************************************************************************

இன்னும் கண நேரத்தில் பெயர்ந்து விடும்
நேரம் ரொம்பவும் குறைச்சல்
புறாக் கூட்டம் பிரிந்து பறந்தது போன வாரம்
சமயங்களில் வரும் காக்கைகளும் ஆளைக் காணோம்
வந்து இளைப்பாறும் வழிப்போக்கர்கள் பயந்து விலகினர்
விழாமல் இருக்க வயிற்றில் கயிறு வேறு
ரெண்டு மாதம் மூன்று மாதம் என விழுந்து விழுது ஒன்றும் இல்லை
அங்கங்கே காவி நிறத்தில் உயிரிழந்த அந்த காலத் தண்டுகள்
பாரத்தைப் பொருட்படுத்தி உயிரைத் தாங்கும் வேர்கள்
என்று பெயர்வோம் என்றெல்லாம் கவலைப் படாமல்
மொட்டையாய் மொத்தமாய் இன்னும்  நிற்கிறது அது, அதில்
யாருக்கோ காற்று வரட்டும் என்று
வேகமாய்க் காற்றில் ஆடும் மிஞ்சிய இலைகள்

**************************************************************************************

விசித்திர இரவுகளில்
விடுக்கென்று கனவொன்று வந்து
திடுமென விழித்து வெளியில் பார்த்தால்
விந்தைகள் ஏராளம், கண்டு பார் பெண்ணே என்னுடன் ...
அரை நிலா ஒன்று, நட்சத்திரம் சில ...,
பக்கத்து மாடியில் சரசம் செய்து சமரசம் செய்யும்
முதிர் தம்பதிக் கூட்டங்கள்,
யாரும் பார்க்காமல் முத்தமிட்டுக் கொள்வோமென
அவசரம் கொண்டு பொந்துகளில் ஒளியும் எலிக் கூட்டங்கள்,
சற்று நாழிகையில் விடிந்து தொலையுமென
இன்னும் பெய்து ஊரைச் சகதியாக்கும் மழை,
இருக்கும் நேரத்தில் குட்டையில்
சத்தமிடும் ஊர், பெயர் தெரியா பூச்சிகள்,
எஜமான் கட்டளை மீறாமல் சொன்ன கடமை முடிக்கக்
காத்திருக்கும் முள் இல்லா அலாரங்கள்,
அடுத்த குடித்தனத்தின் அந்தரங்க சில்மிஷங்கள்,
கொஞ்சமாய் ஒட்டுக் கேட்கும் இந்த வீட்டு பல்லிகள்,
ஏதோ ஒரு வீட்டில் எதற்காகவோ அழும் குழந்தை,
இருந்து விட்டுப் போகட்டுமென் அபஸ்வரமாய்
கத்திக் கொண்டிருக்கும் மழையில் நனைந்த வெளிர் நாய்
இனி இப்படி வெளியில் ஒரு உலகம் வாழ
நீ மட்டும் இன்னமும் ஏன் தூங்கிப்
பொழுதைக் கழிக்கிறாய் இந்த மழை இரவில்?
வா கொஞ்சம் காதல் செய்வோம் இந்த மழையில்,
கொஞ்சம் கப்பல்களும்

**************************************************************************************

ஓராயிரம் பறவைகளுள்
நான் தனிப்பறவை
என் குரல் எங்கும் கேட்பதில்லை
எனதால் தனியாய்க் கேக்கட்டுமென
பாடுகிறேன் தள்ளி வந்து
பத்து மீட்டர் இருபது மீட்டர்
வீச்சு அதனைத் தாண்டினால் அதிசயம்
எப்படிப் பாடினாலும் அழுதாலும்
கார்வை கிழியக் கத்தினாலும்
என் அடையாளம் தெரிவதில்லை வெளியில்
நான் விரும்பிப் பாடும் காதுகளுக்கு ...
நான் என்னும் அடையாளம் எனக்குள் (மட்டுமே)
புதையும் பொது - அச்சொல்லின் வலுவியல்
ரொம்பவும் சன்னம் - சொல்லிப் பார்க்கிறேன் மறுமுறை ...
சேர்ந்து கத்தி நான் நாமென்றாகலாம் என்றால்
என்னுள் தங்கி புதைந்து சொரிந்து அடம் கொண்டு
வெளிவரா 'நான்' ஒவ்வுவதில்லை
தனிப் புறாக்களும் தனி ஆடுகளும் மந்தையில் மேய்ந்தால்
கூட்டத்தின் பெருமை என்னாவது? எனக்கென ஆச்சு
என் போல பல 'நான்' சேர்ந்த உருவாகும்
போதைப் பறவையாய் இன்னும் நாமாக
விருப்பமில்லாமல் கேட்காத காதுகளுக்காக
இனி கடந்த நொடியை விட இன்னமும் இன்னமும்
உரக்கக் கத்தும் நான் ...

**************************************************************************************

புகைப்படம்  வேண்டுமென்றேன்
தகர அறையில் பார்த்து பார்த்து நடந்து வந்தாள்
மேலாடை விலக்கென்றேன்
கண்களில் கொஞ்சம் கிறக்கம்
கழுத்து லேசாய் இறக்கம்
வாய் அசைத்திரு, ஓரமாய்ப் பார்
இடுப்பு தெரிந்தால் நல்லது
கால் கோணல் வேண்டாம்
நகம் என்னைப் பார்க்கட்டும்
அசைவில் ஆச்சரியம் தா
இடையில் மிதப்பு மார்பில் தவிப்பும் தா
எல்லாம் தந்தாள் சொன்ன படி
கேட்ட அனைத்தும் கொடுத்தவள் தன்னையும்
பணத்தையும் மறுத்துச் சென்றாள்
இனிக் கழுவ வேண்டும் .... பிரிண்டையும் மனதையும் ... 


**************************************************************************************

யமுனாவின் அரங்கேற்றம்
காம்போதியில் சில ஸ்வரங்கள் பாட
தனிச்சையாய் தாளமிடும் வெற்றிலைப் பாக்குக் கைகள்
மணி நேர ஆட்டத்தின் தாளப் பிரவாஹத்தில் தழும்புப் பாதங்கள்
ஒரு மனதாய் வெகுண்ட கைதட்டலில் 
பிஞ்சு நாட்கள் நோக்கி நகர்ந்த விரல்கள்
சினிமாவில் வருவாயா சீரியலில் வருவாயா 
என மீடியா பெரியவர் கேட்க
அம்மா அகாடமிப் பெரியவரிடம் ஆபேரியைச் சிலாகிக்க
அமெரிக்கா மாமா கான்பாரன்சில் வியக்க
ஐ.ஐ,டீ அண்ணன் ஹிந்துவுக்கு எழுத முற்பட
அண்ணாமலை டிரைவரின் 

பாதி சிகரட் கைகளைப் பற்றிச் சொன்னாள் 
"ஒரு முத்தம் தான் கொடேன்" 


**************************************************************************************

நிகழ் வானம் நேற்று பார்த்ததை விட 

அலங்காரப்  பரிவாரங்களுடன் ஆக்கிரமிக்க 
காலை எப்போதோ வரப்போகும் கதிரவனுக்கு 
ராகம் தாளமென நிலா, நட்சத்திரப் பட்டாளத்துடன் காத்திருக்க 
கதிரவன் புதுக் கல்யாண மாப்பிள்ளை என் 
அலட்சியம் மற்றும் அசதித் தூக்கத்தில் ஆளைக் காணோம் 
காத்திருந்த நிலவுக்கு காலை ஆடை துகுளுரியப் பெறப் போகும் 
ஆச்சரிய வெட்கத்தில் இன்னமும் புதுப் பொலிவுடன் ... 
மறைய தெரிய விலக வெளியே வர ஆனந்த விளையாட்டுக்கள் ... 

**************************************************************************************

முகம் மூடி அலமாரியில் மறைந்து 
யாரும் வருகிறாரா என 
நொடிக்கொருமுறை எட்டிப் பார்த்து 
வந்தால் மறைந்து 
இல்லை என்றால்  வேர்த்து 
விறுவிறுக்க முதல் ஆளாய் ஓடிச் சென்று 
சத்தமாய் அவுட் என்று 
ஆனந்த முழக்கமிட்டுக் கத்தும் 
அன்றாட எளிய விளையாட்டுகள் 
அன்று கண்ட வீட்டில் தான் 
விசித்திர விந்தைப் பறவை போல 
ஆங்காங்கே மூலையில் 
ரிக்லைனர் சோபாவிலும் 
செமி ஸ்லீப்பர் கவுச்சிலும் 
குர்குரே சகிதம் கோலோச்சி 
அருகில் இருப்பவர் யாரென்று கூடத் 
தெரிந்து கொள்ள விரும்பாது 
தினம் வாயற்ற மெஷினிடம் 
மல்லுக்கு நிற்கிறது 
அடுத்த தலைமுறை இன்று 


**************************************************************************************

ஆண்டாள் கொண்டையில் அவள் மினுமினுக்க
அருகே நான் உட்கார்ந்து தக தகக்க
மாட்டுபொண்ணு வந்தாச்சா என்று அவரவர் விசாரிக்க

அமோகமாக நடந்து முடிந்தது என் அப்பாவின் இரண்டாம் கல்யாணம்

**************************************************************************************


Saturday, May 11, 2013

அம்மா



இது ஒரு மந்திரச் சொல். இந்தச் சொல்லில் 
ஓராயிரம் புனிதங்கள் ஒளிந்திருக்கின்றன. நாம் 
வாழும் வாழ்க்கையில் கண்டிப்பாக எதோ ஒரு 
சமயத்தில் ஒரு நிமிடமாவது யாரையாவது 
வெறுத்துத் திட்டி இருப்போம், நன்றாக யோசித்துப் 
பாருங்கள் நம்மைப் பெற்ற தாயை மட்டும் இதில் 
விதிவிலக்காக வைத்திருப்போம் 

இந்தப் பதிவில் தாயைப் பற்றி நீட்டி முழக்கி பாலா, 
சேரன் படங்கள் போல திணறத் திணற பார்சலாக 
இரண்டு கர்சீப்புகள் கொடுக்குமளவுக்கு. கதறி 
அழவைக்கும் படி எழுதலாம். ஆயிரம் லைக்சும் 
வாங்கலாம்(இப்படிச் சொன்னாலாவது யாராவது 
லைக் போடுவார்கள் என்ற நப்பாசை தான்) 
ஆனால் இதனை ஒரு இனிமையான பதிவாக 
எழுத விழைந்துள்ளேன், இந்த அன்னையர் தினத்தில். 




தாயின் பெருமையைப் பேசும் பல பாடல்கள் 
தமிழ் சினிமாவில் வந்துள்ளன ...

தாயில்லாமல் நானில்லை தானே எவரும் 
பிறப்பதில்லை 

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே 

அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே 

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை அம்மா 

ஆராரிராரோ நானுன்னைக் காண தாயே நீ கண்ணுறங்கு 

இதைத் தவிர இன்ன சிற பாடல்கள் 
உண்டென்றாலும் Top 4 இல் இவை தான் என் 
கண்ணிற்குத் தெரிகிறது.

இதில் என் மனதிற்கு மிக நெருக்கமான் 
பாடல் மன்னன் படத்தில் வரும் அம்மா 
என்றழைக்காத உயிரில்லையே ... 


என்ன ஒரு அற்புதமான பாடல். இளையராஜாவின் 
இசையில், வாலியின் வரிகளில்,ஜேசுதாசின் 
குரலில் இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் 
ஆனந்தப் பரவசம் ஏற்படுகிறது. எனக்கு மிகவும் 
பிடித்தவை இரண்டு வரிகள் 

"அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே 

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?" 

எவ்வளவு நிதர்சமான வரிகள். ஒரு தாய் கரு 
உண்டான நொடியில் இருந்து நாம் பெரியாள் ஆகும் 
வரை நமக்குச் செய்யும் எதற்காவது பொருள், பணம் 
ஈடாகுமா? பெண்ணாகப் பிறப்பதற்குக் கொடுத்து 
வைத்திருக்க வேண்டும், தாய் ஆக அது வழி 
செய்வதால். 

இந்தப் பாடலில் பண்டரிபாயின் நடிப்பும் ரஜினியின் 
நடிப்பும் மிக மிக அருமை. ரஜினி போன்று 
வீணடிக்கப்பட்ட குணசித்திர நடிகரின் யதார்த்தம் 
இதில் வெளிப்பட்டிருக்கும். கண்டிப்பாக கமல் 
நடித்திருந்தால் எடுபட்டிருக்காது என்பது என் 
நேர்மையான அபிப்ராயம் 
(நான் கமலின் வெறித்தனமான  விசிறி). 

நான் என் கல்யாண ரிசப்ஷனில் இந்தப் பாடலைப் 
பாடி திருப்திப் பட்டுக் கொண்டேன் 

சரி விஷயத்திற்கு வருவோம், ஏன் அன்னையர் 
தினம் கொண்டாடுகிறோம்? சொல்லப்போனால் 
இந்த அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் 
தினம் இதெல்லாம் தேவையா? கண்டிப்பாக 
இல்லை. ஆனால்,  இது கிட்டத்தட்ட பிறந்த நாள் 
மாதிரி தான். ஒரு remembrance. அவ்வளவு தான். 

இன்று இதை செய்து பாருங்கள் ... கையில் இருக்கும் 
லாப்டாப்பை கீழே வைத்து விட்டு, உடனே கிச்சனில்
சமைத்துக் கொண்டோ, பேக்கடையில் துவைத்துக் 
கொண்டோ, ஹாலில் டீவீ பார்த்துக் கொண்டோ, 
பெட் ரூமில் உங்கள் துணியை மடித்துக் கொண்டோ, 
மொட்டை மாடியில் வடாம் காயப்  போட்டுக் 
கொண்டோ, வெராண்டாவில் வேண்டா 
விருந்தாளியாக உங்களால் தள்ளப்பட்டு 
படுத்துக்கொண்டோ , அதையும் தாண்டி முதியோர் 
இல்லத்தில் நாட்களை எண்ணிக்கொண்டோ 
இருக்கும் உங்களைப் பெற்ற  தாயின் கைகளைப் 
பற்றி "நன்றி" என்று சொல்லுங்கள். அவள் முகத்தில் 
தெரியும் சந்தோஷத்திற்கு ஈடு இணை  இருக்காது ...   
ஒரு வேலை முதியோர் இல்லத்தில் இருந்தால், 
வரும் போது  உங்களுக்கும் Life membership pass 
வாங்கிக் கொள்ளுங்கள், பத்து வருடங்கள் கழித்து 
உங்கள் பிள்ளைகள் அங்கு உங்களை செருப்பால் 
அடித்து விரட்டும் போது fees அதிகமாய் இருக்கலாம் 
... ஒரு சிறு சேமிப்பு தான் .... 

இப்போது கொஞ்சம் லேசாகலாம் ... 

நாம் கண்டிப்பாக அப்பா, அம்மாவிடம் அடி வாங்கி 
இருப்போம். அடியேனும் விதிவிலக்கல்ல. 
நானென்ன நம்மாழ்வாரா? என் நினைவிற்குத் 
தெரிந்து நான் அம்மாவிடம் வாங்கிய முதல் அடி 
சற்றும் எதிர்பாராத க்ஷணத்தில் விழுந்தது. 

அந்தக் காலத்தில் வீட்டில் கமல் படங்களுக்கு 
மட்டும் தான் கூட்டிக் கொண்டு போவார்கள். 
சலங்கை ஒலி, சகலகலா வல்லவன் படங்களுக்கு 
அம்பத்தூர் ராக்கி,முருகன் தியேட்டர்கள் சென்று 
பார்த்த நினைவுகள் இன்னமும் அடி ஆழ மனதில் 
புதைந்திருக்கின்றன 

1986 ஆம் வருடம். எனக்கு ஐந்தரை வயது. விக்ரம் 
படம் மேட்டணி ஷோ குரோம்பேட்டை வெற்றி 
தியேட்டரில் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து 
எல்லாரும் தூங்கி விட்டோம். மாலையில் நானும் 
பக்கத்து வீட்டு வடமா ஐயர் குட்டி அபர்ணாவும் 
(literal ஆக குட்டி தான், 4 வயது) விளையாடிக் 
கொண்டிருந்தோம். அம்மா துவைக்கிற கல்லில் 
(துவைக்கிற கல் எனும் சங்கதி இன்னும் எங்காவது 
உள்ளதா சென்னையில்?) பிசியாக இருந்தார். 

திடீரென்று ஈசானி மூலையில் வெகுண்ட பால்யக் 
காதலில் ஒரு ஆவேசம் உந்தித் தள்ள 

"கண்ணே,  தொட்டுக்கவா?, கட்டிக்கவா? 
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா? தொட்டுகிட்டா 
பத்திக்குமே? பத்திக்கிட்டா பத்தட்டுமே? 
அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டுத் துடிக்குது 
கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன 
துடிக்குது ... தப்பி விட வேண்டுமென்று கெண்டை 
மீனு தவிக்குது குளிக்கிற மீனுக்கு குளிரென்ன 
அடிக்குது? பசி தாங்குமா இளமை இனி? பரிமாற வா 
இளமாங்கனி" 

என்ற இதிகாசப் புராண வரிகளில் கமலும் 
அம்பிகாவும் காம மழையில் நனையும் சங்கதி 
inspire செய்ய, மெல்லமாய் அபர்ணாவிடம் சென்று 
அவள் சற்றும் எதிர்பாராத நொடியில் ஒரு முத்தம் 
கொடுத்து 'ஐ லவ் யூ' சொன்னேன். அவள் புரியாமல் 
கன்னத்தைத் துடைத்துக் கொள்ளும் அதே 
வினாடியில் திடீரென்று இடியும் மின்னலும்... 
மின்னல் முதலில் என் முகத்தில் தெரிந்தது பல்ப் 
போல ...  பின் பளார் எனும் சத்தம் ... Light travels faster 
than sound.. பின்னர் தான் மூளைக்குச் சங்கதி போய் 
செம்ம வலி. முதுகில் அறைந்தது அம்மா. 
அன்றிலிருந்து தான் நல்ல புத்தி .வந்தது எனக்கு .. 
அதாவது இனி "ஐ லவ் யூ' சொல்ல 
வேண்டுமென்றால் சுற்றி முற்றி ஒரு முறை 
பார்த்துக் கொள்வது நல்லது . 

எல்லாருக்கும் இனிய அன்னையர் தின 
நல்வாழ்த்துக்கள் !!!