இன்று தான் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டே வழக்கு எண்
படத்தைப் பார்த்து முடித்தேன். சினிமா விமர்சனம் எல்லாம் எழுதி
நேரத்தை வீணாக்க மாட்டேன் என்று கதை எல்லாம் விடாமல்
நல்ல படங்களை விமர்சனம் செய்யும் யோக்கியதுடன் இந்த பதிவை
எழுதுகிறேன். ஆனால் அதற்காக ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு
போறேன் என்று வடிவேலு போல கத்திக் கொண்டே முழு கதையையும்
ஒப்பிக்கப் போவதில்லை.

மாட்டருக்கு வருவோம். கண்டிப்பாக மிகவும் நல்ல படம்,
அதை நிச்சயமாக மறுக்க முடியாது.மூன்று நான்கு கொம்புகள்,
பத்து லென்ஸ் எல்லாம் வைத்துக் கொண்டுபுருவத்தை நூறு மடங்கு
சுருக்கி குறை கண்டுபிடிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் நாம்.

ஆனால், போகிற போக்கில் பார்த்தால் இந்த படம் உலகத் தரம் வாய்ந்தது, நூத்தி
இருபது ஆஸ்கர் வாங்கும் வல்லமை படைத்தது என்றெல்லாம் வெளியே
சொல்லாவிட்டால் நம் மீது ஆசிட்ஊற்றி விடுவார்களோ என்று பயப்படும் படி,
விகடன், குமுதம் முதல் பாம்பு பஞ்சாங்கம் வரை எல்லாரும் தலையில் வைத்துக்

கொண்டாடுவது தான் மிகப் பெரிய நெருடல்.
அவர்களையும் தப்பு சொல்ல முடியாது. பட்டர் பிஸ்கட்டுக்கே சிங்கி அடிப்பவன்
கையில் நாலு பட்டர் நானும் பன்னீர் பட்டர் மசாலாவும் நனைத்து வாயில் வைத்தால்
எப்படி இருக்கும் என்பது போல பல குப்பைகளுக்கு நடுவில் ஒரு மோதிரம் மாட்டினால்
கையில் மாட்டுகிறதோ இல்லையோ அதை மாட்டு மாட்டு என்று மாட்டிப் பார்க்கிறார்கள்
என்று மன்னித்து விடலாம். ஆனால் சில சினிமா ஜீவிகள் இது தான் மோதிரம் மற்றதெல்லாம் *****"
(அழகான மோனையுடன் கூடிய ஒரு வார்த்தையை கோடிட்ட இடத்தில நிரப்பி
மனதிருப்தி அடைந்து கொள்வது உங்கள் சாமர்த்தியம்) என்று சொல்வது தான் டூ மச்.
நந்தலாலாவை வைத்துக் கொண்டு ஒரு கும்பலே தாலாட்டு பாடி சாவடித்தது போல.
வழக்கு எண் 18/9
எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது இரண்டு பேர். மொத்தமே பத்துக்கும் குறைவான
பாத்திரங்கள் இருந்தாலும் மனதில் அப்படியே நிற்பது இன்ஸ்பெக்டர் மற்றும்
ஹீரோவாக நடித்த ஸ்ரீ மட்டும் தான். மற்றவர்கள் மயிரிழையில் மிஸ் செய்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே மூஞ்சில் வெந்நீர் ஊற்றுவது, ஆசிடைப் பற்றி படிப்பது,
ஜோதி முதலிலேயே ஒரு காட்சியில் முகத்தை டவலால் மறைப்பது,
போகிற போக்கில் கந்து வட்டிக்காரர் "என்ன ஏஜெண்டு எப்படி இருக்க" என்று கேட்பது,
மண் சரிவு, விவசாய நிலங்கள் வீடுமனை ஆவது, இந்த கால (அய்யயோ 'இந்த கால'
ன்னு சொல்ற அளவுக்கு நமக்கு வயசாயிடுச்சோ ... சூனாபானா ... இல்ல இல்ல ...)
நம்ம காலத்து பசங்கள் தமிழை ஆங்கிலம் போல பேசி கில்மாக்கள் செய்வது
என்று அங்கங்கே சான்ட்விச் வைத்திருப்பது நல்ல திரைக்கதைக்கு ழகு.
பாலாஜியின் முந்தைய படங்களான சாமுராய், காதல், கல்லூரி எல்லாவற்றிலும்
இருக்கும் சமாச்சாரங்கள் இதில் இல்லாமல் இல்லை (நெருப்பு சம்பந்தமான
ஒரு விபத்து எல்லாவற்றிலும் உண்டு, ஓவராக பேசும் சின்னப் பையன்,
நல்லவன் போல நடித்து ஏமாற்றும் முக்கிய கதாபாத்திரம், உண்மைச் சம்பவத்தின்
அடிப்படை, விளிம்பு நிலை (இதை வைத்துக் கொண்டு நல்ல வேலை மிஷ்கின், வசந்த பாலன்,
பாண்டியராஜ் போல ஜல்லி அடிக்கவில்லை) மனிதர்களின் நகைச்சுவை என்று
பாலாஜி தன குரு நாதர் ஷங்கரைப் போல கிளிஷே பரம்பரையைச் சேர்ந்தவர்
என்று நிரூபித்திருக்கிறார்.
இதை எல்லாம் வைத்துக் கொண்டு இது குப்பை என்று சொல்ல வரவில்லை.
இவை எல்லாம் இருந்தும் இது மிகவும் நல்ல படம் என்று சொல்கிறேன்.
எல்லாவற்றிகும் மையில் கல் கடைசி காட்சியில் ஜோதி பார்க்கும் பார்வை.
எனக்கென்னவோ கடைசி ஒரு வருடத்தில் வந்த நல்ல படங்களைப் பார்த்தால்
ஆடுகளம், ஆரண்யகாண்டம், மௌன குரு, வழக்கு எண் மட்டுமே தேறும் என்று தோன்றுகிறது.
கமலிடம் ஒரு நேர்காணலில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது
"You can dance, you can sing, you can write, you can act, you can do screenplay,
you have your own production house, you have directed and what not ...
Can you claim yourselves a cinema alrounder or a genius"
இப்படி ஒரு கேள்வியை பாலிவுட்டைச் சேர்ந்த கான், கபூர்
அல்லது பச்சனிடம் கேட்டிருந்தால் முகத்தை plain ஆக வைத்துகொண்டு
வெட்கம் மற்றும் அதீத அடக்கத்துடன் 'ஆம்' என்பது போல
ஒரு வழிசல் வழிந்திருப்பார்கள் (முக்கியமாக் ஷாரூக் கான் தான்
மிகவும் சாமர்த்தியசாலி என்ற விதத்தில் உளறி சாவடிப்பார் ....)
But Kamal just gave simple and quick retort
"Well ... When mediocrity sets the standard, people like me will be misunderstood as genius"
கொஞ்சம் அறியாமையுடன் கூடிய அதிகப்ப்ரசங்கித்தனதுடன் மொழி பெயர்த்தால்
"கண்ணில்லாத ஊரில் ஒற்றைக் கண்" இருப்பது போல என்று சொல்லலாம்.
ஆனால் நல்ல வேலை கமல், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் போல
ஒற்றை கண்ணாவது நமக்கு மிஞ்சுகிறதே ...

Naan innum padam pakkala. Pathuttu badil solren. By the by enakkum adukalam and mounaguru piththathu.
ReplyDelete