Pages

Sunday, April 29, 2012

A sweet digression


இரண்டாவது பதிவாக ஒரு சிறுகதை எழுதத் தான் திட்டமிட்டிருந்தேன்.

சொல்லப் போனால் எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது.
தினமும் அதிகாலை மூன்று மணி வரை ஆபீஸ் வேலை
பார்க்கிறேன் என்பது போக, இப்படி இடைவெளி கிடைத்தால் எழுதுவது
கொஞ்சம் sweet digression எனக் கொள்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன்
(வந்துத் தொல .... ) நேற்றிரவு நடந்த ஒரு சங்கதி (மறுபடியும் இரவா?)
ரொம்பவும் ஸ்வீட் ... (243 mg/dl) அதன் தாக்கத்திலிருந்து வர ஒரு
ப்ளாக் தேவைப் படுகிறது, இதோ இது தான்,பாதி எழுதி முடித்திருந்த
அந்தச் சிறுகதையை பின்னுக்குத் தள்ளி (அல்லது முன்னுக்கா?
pop_front or push_back?) கர்பக்க்ரஹத்தை விட்டு வெளிவந்து விட்டது
இதோ இதோ ...

முதல் பாராவில் எதேச்சையாக யோசித்துக் கொண்டே lexical convention

கொண்டு 'sweet digression' என்று சொல்லிவிட்டேன் ... சரி ... இந்த 'Sweet'
என்பது என்ன ? இனிப்பு, இனிப்பான என சொல்வதில் தொடங்கி, அதைச்
சுவைப்பதில், அதைப் பற்றி பேசுவதில் எல்லாம் ஒரு வித கிளுகிளுப்பு
அடங்கியுள்ளதாக உருவகத் தோற்றப் படுத்தி Universal Context இல் உடன்பட்டு
பிரயோகிக்கிறோம் இனிப்பு எனும் சுவை, பொருள் மற்றும் வார்த்தையை.

இனிப்பு அவ்வளவு இனிப்பான சங்கதியா? பார்ப்போம் ...


சென்ற வருடம் ஆகஸ்ட் தேதியில் தான் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட

அந்த நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக வெளியுலகத்திற்குத்
தெரியவந்தது. பரம்பரை வியாதி, சுக்கிரன் சரியில்லை என்று
அடிப்படைத் தத்துவம் சொல்லி தேத்திக் கொண்டாலும் எல்லாச் சங்கதிக்கும்
ஒரு மூலம் கண்டுபிடிக்காவிடில் எல்லாரும் குகைக்குச சென்று
விட வேண்டியது தான்.

சர்க்கரை வியாதி பரம்பரை வியாதி தான், கண்டிப்பாக 2nd or 3rd

ஜெனரேஷன் வரை விடாது கருப்பு தான் ...சரி எப்படி
அதைக் குணப்படுத்தலாம்? எவ்வளவு நாளாகும்? எதைத் தின்றால்
பித்தம் தெளியும் என்றெல்லாம் குழம்புவதற்கு முன் ஒன்றை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். சர்க்கரை வியாதியை
குணப்படுத்தமுடியாது. Period.

It is not curable. It is preventable to some extent and totally controllable.
முடிந்தால் தடுக்கலாம், வந்தால் கட்டுப்படுத்தலாம்.

பிரச்சனை வந்தால் எப்படி வந்தது, ஏன் வந்தது என்பதை விஞ்ஞான
பூர்வமாக ஆராய்வதில் உள்ள இன்றியமையாத தன்மையை
தவிர்க்க முடியாது. சொல்லபோனால் நம் எல்லாருக்கும் எதோ
ஒரு பிரச்சனை வரக் காத்திருக்கிறது. எப்போது/எதன் அல்லது
யார் மூலம்/எவ்வளவு/ஏன்/எங்கு/என்ன என்பதில் தான் தாயக் கட்டு
சூட்சுமம் அடங்கியிருக்குறது. மரத்துகளில் அல்லது கட்டிலில்
ஒளிந்திருக்கும் மூட்டை பூச்சி மனித வாசத்தை முகர்ந்தால் பல
வருட விரதத்திற்குப் பின் துள்ளி எழுவது போல, ambience (or) 
reasoning base  வரும் போது பிரச்சனை கூப்பிடாமல் Asynchronous 
ஆக சேர்ந்து பல்வேறு dimension இல் வரும்.

சர்க்கரை வியாதியும் ஒரு பூச்சி தான், அது வர நாம் தரும்
ஸ்கோப் உடற்பயிற்சி செய்யாதது, உணவுப் பழக்கம் etc. 
இப்பவே கண்ணக்கட்டுது என்கிறீர்களா? சரி மேல ...

சர்க்கரை வியாதி Type 1, Type 2 என்று இரண்டு வகைப் படும்
என்றெல்லாம் போரடிக்க மாட்டேன் ... நான் மருத்துவனோ
கூகுளோ இல்லை ...

என்னால் முடிந்தது, சர்க்கரை வியாதிக்கு என் சிறு மூளைக்கு
(அல்லது வாய்க்கு) எட்டிய சில  மருத்துவப் பரிகாரங்கள் ...
(பரிகாரங்களை work around என்று மொழி பெயர்க்க இயலுமா?)

1) வெண்டைக்காய் ஜூஸ் ரொம்பவும் நல்லது .... இரவு தூங்கப் போகும்
முன், இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மூன்றாக நறுக்கி
ஒரு டம்ளரில் குடிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
அடுத்த நாள் காலை பல் விளக்கியவுடன் டம்ளரில் உள்ளதை
வடிகட்டி (வெண்டக்காயை சமையலுக்கு உபயோகப் படுத்திக்
கொள்ளலாம்) அந்த ஜூசை உண்ணவும்.

2) குதிரைகள் ஏன் வேகமாக ஓடுகின்றன? எப்படி இப்படி நமீதா போல
நீண்டு அகண்டு இருப்பினும் இவ்வளவு stamina? ஏனென்றால் அவை
கொள்ளு சாப்பிடுகின்றன. கொள்ளு என்பது பண்டைய தமிழில்
ஒரு அளவீடைக் குறிக்கும். குதிரை சாப்பிடும் உணவின் அளவே
உணவிற்கும் அளவிற்கும் பொது unit என்று பிற்காலத்தில்
மருவிவிட்டது. திரும்பவும் அதே பல்லவி தான் ... கொள்ளுப்பயிரை
பொடி செய்து, வறுத்து, உலர்த்தி, காயப் போட்டு காலை
எழுந்தவுடன் தண்ணீரில் கலந்து உண்ணலாம் 

3) வெந்தயப் பொடிக்கும் அதே treatment தான் ... Highly successful combo 
வெந்தயம் + தண்ணீர் + அதிகாலை =ilayaraja + manirathnam + pc.sreeram 

4) இருக்கவே இருக்கிறது பாகற்காய் ...


5) பொதுவாக க்ளுக்கோஸ் குறைந்த எதையும் உண்ணலாம்.
சுக்ரோஸ் பரவாயில்லை. Glycemic Index இல் தான் மாயம்
காத்திருக்கிறது அதனால் தான் தர்பூஸ் போன்ற மிக இனிப்பான
நீர் சத்து பழங்களை உண்டால் கூட பெரிதாக பிரச்சனை
இல்லை. எதுவாக இருந்தாலும் 'அளவுக்கு மீறினால்' is the key phrase. 

6) கண்டிப்பாக தினமும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.
ஓட முடிந்தால் ஓடலாம் ...

7) நோ வாழைப்பழம், நோ தேங்காய், நோ சர்க்கரை, நோ தேன்,
நோ உருளை, நோ கிழங்குகள், முக்கியமாக நோ பச்சரிசி.

இதற்கு மேல் என்ன ம***க்கு வாழ வேண்டுமென்றெல்லாம்
கேட்கப்படாது ... வாழ்வது வேறு ... சுகமாய் வாழ்வது வேறு ...
ஆரோக்கியமாய வாழ்வது வேறு என்றெல்லாம் ஜல்லி அடித்து
பதில் சொல்ல மாட்டேன் ... 

Pleasure and health are not independent parameters and to live is to live. period. 

திரும்பவும் சொல்கிறேன் ... நான் சொன்ன இந்த ஏழு விதிமுறைகள்
are human and implementation specific. சில பேருக்கு ஒத்து வரலாம், சிலருக்கு வேலைக்காகாமல் போகலாம், என் சட்டையை பிடிக்கப்படாது.

சரி ரொம்பவும் இனிப்பு குறைந்த ஒரு ப்ளாகின் முடிவில்
ஒரு ஸ்வீட் ஜோக் (தயவு செய்து சிரிக்கவும், TRP குறைந்து விடும்)

நம்ம அண்ணாச்சிக்கு ரொம்ப நாளா சக்கர வியாதியாம் ...
டாக்டர் நடக்கச் சொன்னதுனால மனசில்லாம ஆடி அசஞ்சு
ரெண்டு கிலோமீட்டர் நடந்தே ஒரு வழியா மெடிகல் ஷாப்
போய்க் கேட்டாராம்

"தம்பி ... சக்கர வியாதிக்கு எதுப்பா நல்லது?"


"எதுவேணா ஒகே தான் பெரியவரே ... வாயில போடாத வரைக்கும்"







Thursday, April 26, 2012

இதோ இந்த இரவில் ....

நாம் மட்டும் நமக்காக நம்முடன் என்று தைரியமாய் 
நம்பி சிலாகிக்கும் உரிமை தரும், ரொம்பவும் அதிதீவிர ஜனநாயக
கிறக்கம் தரும் இந்த இரவு தான் இந்த ப்ளாகின் நாயகன்.
சொல்பவன் கண்ணன், செய்பவன் கண்ணன் போலே,
எழுதுவது இரவில், எழுதுவது இரவைப்பற்றி. Subject 
Object எல்லாம் ஒன்று தான்.பால் கேட்டு அழாத சமர்த்துக்
குழந்தை போல ரொம்பவும் கையடக்கம். அப்படி என்ன செய்து
விட முடியும்? உணர்ச்சிவசப்பட்டு சில்மிஷங்கள் சொல்லப்
போகிறேன் என்றெல்லாம் நினைத்து உமாச்சியைக் கூப்பிட
வேண்டாம். அதைத் தாண்டி சுவாரசியம் நிறைந்த பல
விளையாட்டுகள் செய்யலாம், இதோ இப்படி கையில் ஒரு
லாப்டாப் உள்ளது என்று தான்தோன்றித்தனமாய், ரொம்பவும்
அலட்சியம், அகங்காரம் கொண்டு ப்ளாக் எல்லாம் எழுதலாம், சௌகரியம்.

ரெஹ்மான் இரவில் தான் இசையமைப்பாராம், வாலி,
கண்ணதாசன் போன்றோர் எழுதியதில் பாதிக்கு மேல் இரவுப் பொழுதில்
எழுதியவை தான் (இன்றும் 'பாலும் பழமும்' 'தென் துளி' என்று
பல FM  களில்  வண்டி ஒட்டிக் கொண்டிருக்கின்றன),
இப்படி எல்லாம் சொல்லி நானும் போதி மரத்திற்குக் கீழே
வலுக்காடாயமாஉட்கார்ந்து ஞானம் பெறப் போகிறேன்
என்றெல்லாம் ஜல்லி அடிக்க விரும்பவில்லை. I just love night, period.  

சரி மேலே போ என்று சொன்னால் அப்படி எல்லாம்
ஒன்றுமில்லை, இந்த முதல் ப்ளாகை இதோ நான் மிகவும்
விரும்பும் உயிர், பொருள், குறியீடு, மதிப்பீடு, அளவீடு அற்ற
காலம் எனும் இரவுக்காக இரவில் அர்ப்பணித்து எழுதுவதில்
ஒரு வித நன்றி உணர்ச்சி கூட மிகுவதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

எவ்வளவு இளையராஜா பாடல்கள் (Stating the obvious) ,

ரெஹ்மான் பாடல்கள் (Yes, I like Arr too for taste does not have to be binary
even if considered  superficially mandatory by the outward world), வித்யாசாகர்
பாடல்கள் (இரவில் தேவதை வம்சம் நீயோ அல்லது அன்பே 
அன்பே நீ என் பிள்ளை இதில் ஏதாவது கேட்டுப் பாருங்கள்) 
என்று கேட்டுத்தள்ளியிருப்பேன் ... எவ்வளவு
சுஜாதா, பாலகுமாரன் நாவல்கள் படித்திருப்பேன் ...
எவ்வளவு மொக்கை கதை, கவிதை (இப்போது ப்ளாக்) எல்லாம்
எழுதித் தள்ளி இருப்பேன் (தள்ளி என்பதை contextual meaning கொண்டு
அர்த்தம் கொண்டால் உங்கள் வீட்டில் நாளை கரண்ட் போகாமல்
யாராவது பார்த்துக் கொள்வார்கள்).

கதை, கவிதை எழுதுவதில் பெரிய இடைவெளி ஏற்பட்டு
விட்டதாக, தயவு செய்து கதை எழுதி அனுப்புங்கள் என்று
பெரிய ரசிகர் கூட்டம் (மொத்தம் ரெண்டு பேர், என்னையும் சேர்த்து)
மெயில் அனுப்பி என் மெயில் பாக்சை ஸ்பாம் செய்வது
போலெல்லாம் சௌகரிய கற்பனை செய்து, காலத்தின்
கட்டாயத்தால் (???), சமுதாய முன்னேற்றம் வேண்டி (முடியல ... )
இனி ப்ளாக எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்
(இனி செத்தோம் என்று நினைப்பவர்கள் ஓடி விடுங்கள்)

பார்ப்போம் இந்த முயற்சி எப்படி இருக்கிறதென்று ...
பொழுது போகவேண்டாமா, எனக்கும் உங்களுக்கும்

சரி முடிக்கும் முன் ஒரு கவிதை



ஆடை விலகிய பெண்
ஒரே ஒரு இரவு
என்ன செய்தால் அவள் சுகிப்பாள்?
இப்படிச் செய்யலாமா அப்படிச் செய்யலாமா
என எண்ணுங்கால்
இதோ இந்த இரவு
ஆஷ் ட்ரே நிரம்புகிறது ...
ஒரு பியர் அடிக்கிறேன் 
அடங்கவில்லை காமமும் வியர்வையும்
இன்னும் ஒரு பியர் ...
போதாது மேலே போ
உள்ளே எரியும் எனக்காக
வெளியில் அணையும்
இந்த சிகரட்டுடன் தூங்கிப் போகிறேன் ...
எனக்கும் தெரியாமல்
காற்றில் லேசாய்
அவள் உடை விலகுகிறது
இன்னமும் இன்னமும் இன்னமும் ...