Pages

Sunday, June 3, 2012

வழக்கு எண் 18/9




இன்று தான் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டே வழக்கு எண்
படத்தைப் பார்த்து முடித்தேன். சினிமா விமர்சனம் எல்லாம் எழுதி
நேரத்தை வீணாக்க மாட்டேன் என்று கதை எல்லாம் விடாமல்
நல்ல படங்களை விமர்சனம் செய்யும் யோக்கியதுடன் இந்த பதிவை
எழுதுகிறேன். ஆனால் அதற்காக ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு
போறேன் என்று வடிவேலு போல கத்திக் கொண்டே முழு கதையையும்
ஒப்பிக்கப் போவதில்லை.
மாட்டருக்கு வருவோம். கண்டிப்பாக மிகவும் நல்ல படம்,
அதை நிச்சயமாக மறுக்க முடியாது.மூன்று நான்கு கொம்புகள்,
பத்து லென்ஸ் எல்லாம் வைத்துக் கொண்டுபுருவத்தை நூறு மடங்கு
சுருக்கி குறை கண்டுபிடிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் நாம். 

ஆனால், போகிற போக்கில் பார்த்தால் இந்த படம் உலகத் தரம் வாய்ந்தது, நூத்தி 
இருபது ஆஸ்கர் வாங்கும் வல்லமை படைத்தது என்றெல்லாம் வெளியே 
சொல்லாவிட்டால் நம் மீது ஆசிட்ஊற்றி விடுவார்களோ என்று பயப்படும் படி,
விகடன், குமுதம் 
முதல் பாம்பு பஞ்சாங்கம் வரை எல்லாரும் தலையில் வைத்துக் 
கொண்டாடுவது தான் மிகப் பெரிய நெருடல்.

அவர்களையும் தப்பு சொல்ல முடியாது. பட்டர் பிஸ்கட்டுக்கே சிங்கி அடிப்பவன்
கையில் நாலு பட்டர் நானும் பன்னீர் பட்டர் மசாலாவும் நனைத்து வாயில் வைத்தால்
எப்படி இருக்கும் என்பது போல பல குப்பைகளுக்கு நடுவில் ஒரு மோதிரம் மாட்டினால்
கையில் மாட்டுகிறதோ இல்லையோ அதை மாட்டு மாட்டு என்று மாட்டிப் பார்க்கிறார்கள்
என்று மன்னித்து விடலாம். ஆனால் சில சினிமா ஜீவிகள் இது தான் மோதிரம் மற்றதெல்லாம் *****"
(அழகான மோனையுடன் கூடிய ஒரு வார்த்தையை கோடிட்ட இடத்தில நிரப்பி
மனதிருப்தி அடைந்து கொள்வது உங்கள் சாமர்த்தியம்
) என்று சொல்வது தான் டூ மச்.
நந்தலாலாவை வைத்துக் கொண்டு ஒரு கும்பலே தாலாட்டு பாடி சாவடித்தது போல.

வழக்கு எண் 18/9

எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது இரண்டு பேர். மொத்தமே பத்துக்கும் குறைவான
பாத்திரங்கள் இருந்தாலும் மனதில் அப்படியே நிற்பது இன்ஸ்பெக்டர் மற்றும்
ஹீரோவாக நடித்த ஸ்ரீ மட்டும் தான். மற்றவர்கள் மயிரிழையில் மிஸ் செய்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே மூஞ்சில் வெந்நீர் ஊற்றுவது, ஆசிடைப் பற்றி படிப்பது,
ஜோதி முதலிலேயே 
ஒரு காட்சியில் முகத்தை டவலால் மறைப்பது,
போகிற போக்கில் கந்து வட்டிக்காரர் "என்ன ஏஜெண்டு எப்படி இருக்க" என்று கேட்பது,
மண் சரிவு, விவசாய நிலங்கள் வீடுமனை ஆவது, இந்த கால (அய்யயோ 'இந்த கால'
ன்னு சொல்ற அளவுக்கு நமக்கு வயசாயிடுச்சோ ... சூனாபானா ... இல்ல இல்ல ...)
நம்ம காலத்து பசங்கள் தமிழை ஆங்கிலம் போல பேசி கில்மாக்கள் செய்வது
என்று அங்கங்கே சான்ட்விச் வைத்திருப்பது நல்ல திரைக்கதைக்கு ழகு.

பாலாஜியின் முந்தைய படங்களான சாமுராய், காதல், கல்லூரி எல்லாவற்றிலும்
இருக்கும் சமாச்சாரங்கள் இதில் இல்லாமல் இல்லை (நெருப்பு சம்பந்தமான
ஒரு விபத்து எல்லாவற்றிலும் உண்டு, ஓவராக பேசும் சின்னப் பையன்,
நல்லவன் போல நடித்து ஏமாற்றும் முக்கிய கதாபாத்திரம், உண்மைச் சம்பவத்தின்
அடிப்படை, விளிம்பு நிலை (இதை வைத்துக் கொண்டு நல்ல வேலை மிஷ்கின், வசந்த பாலன்,
பாண்டியராஜ் போல ஜல்லி அடிக்கவில்லை) மனிதர்களின் நகைச்சுவை என்று
பாலாஜி தன குரு நாதர் ஷங்கரைப் போல கிளிஷே பரம்பரையைச் சேர்ந்தவர்
என்று நிரூபித்திருக்கிறார்.

இதை எல்லாம் வைத்துக் கொண்டு இது குப்பை என்று சொல்ல வரவில்லை.
இவை எல்லாம் இருந்தும் இது மிகவும் நல்ல படம் என்று சொல்கிறேன்.
எல்லாவற்றிகும் மையில் கல் கடைசி காட்சியில் ஜோதி பார்க்கும் பார்வை.

எனக்கென்னவோ கடைசி ஒரு வருடத்தில் வந்த நல்ல படங்களைப் பார்த்தால்
ஆடுகளம், ஆரண்யகாண்டம், மௌன குரு, வழக்கு எண்  மட்டுமே தேறும் என்று தோன்றுகிறது.

கமலிடம் ஒரு நேர்காணலில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது

"You can dance, you can sing, you can write, you can act, you can do screenplay,
you have your own production house, you have directed and what not ...
Can you claim yourselves a cinema alrounder or a genius"

இப்படி ஒரு கேள்வியை பாலிவுட்டைச் சேர்ந்த கான், கபூர்
அல்லது பச்சனிடம் கேட்டிருந்தால் முகத்தை plain ஆக வைத்துகொண்டு
வெட்கம் மற்றும் அதீத அடக்கத்துடன் 'ஆம்' என்பது போல
ஒரு வழிசல் வழிந்திருப்பார்கள் (முக்கியமாக் ஷாரூக் கான் தான்
மிகவும் சாமர்த்தியசாலி என்ற விதத்தில் உளறி சாவடிப்பார் ....)

But Kamal just gave simple and quick retort
"Well ... When mediocrity sets the standard, people like me will be misunderstood as genius"

கொஞ்சம் அறியாமையுடன் கூடிய அதிகப்ப்ரசங்கித்தனதுடன் மொழி பெயர்த்தால்
"கண்ணில்லாத ஊரில் ஒற்றைக் கண்" இருப்பது போல என்று சொல்லலாம்.

ஆனால் நல்ல வேலை கமல், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் போல
ஒற்றை கண்ணாவது நமக்கு மிஞ்சுகிறதே ...









Saturday, May 19, 2012

FAST FOOD

1) 'உத்தம புத்திரன்' படத்தில் வரும் "கண் இரண்டில் மோதி" பாடலை
ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் தான் கேட்டேன். சென்ற வருடமே
கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போனது. நரேஷ் ஐயரின் குரலில் 
விஜய் ஆண்டனியின் இசையில் இந்தப் பாடல் ஒரு கம்ப்ளீட் பாடல்
என்பது என் அபிப்ராயம். எனக்குக் கல்யாணமான புதிதில் (May 2011)
வந்த பாடல் என்பதால் Nostalgic feeling எல்லாம் கூட வந்து செல்கிறது


எனக்கு விஜய் ஆண்டனி, பரத்வாஜ் இவர்களின் இசை எல்லாம் 
ரொம்பப் பிடிக்கும், காரணம் கர்நாடக ராகத்தில் அவர்கள் போடும் 
பாடல்கள் தான். 

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, நெஞ்சாங்கூட்டில், suppose 
என்னை, தோழியாய், அழகாய் போகுதே, முலைச்சு மூணு என்று 
எனக்குப் பிடித்த விஜய் ஆண்டனியின் பாடல்களை சொல்லிக் 
கொண்டே போகலாம் (எங்க?)

2) சமீபத்தில் T.N.Seshagopalan அவர்கள் கலந்து கொண்ட 
'மனதோடு மனோ' ப்ரோக்ராம் பார்த்தேன். அதில் அவர் 
தலைவர் இளையராஜா பற்றி பேசி இருக்கிறார், அதுவும் 
எனக்கு மிக மிகப் பிடித்த ஹம்சாநந்தி ராகத்தின் Reference 
வந்துள்ளதால் Height of ectsacy தான் . 


எனக்கு மனோவின் குரல் ரொம்பவெல்லாம் பிடிக்காது. 
மொத்தமாகப் பார்த்தால் அவர் பாடியவற்றில் பத்து தான் 
தேறும்போல தெரிகிறது. ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியைத் 
தொகுத்து வழங்கும் நேர்த்தி பிடிக்கிறது.
"நான் பெரிய அப்பாடக்கர்" என்பது போல நடந்து கொள்ளாமல், 
T.N.Seshagopalan போன்றோர் முன்னால் காட்டும் அடக்கம் 
மற்றும் மரியாதையை magathi போன்ற வளர்ந்து வரும் கலைஞர்கள் 
முன்பும் காட்டுகிறார். 
 இவர் Airtel Super singer இல் மிகப்பெரிய bias செய்கிறார் என்பது வேற 
விஷயம்.  எந்தவிதமான Bias என்று பப்ளிக்கில் கேட்கப்படாது 
(ஒரு வேலை எந்த புண்ணியவானாவது தப்பித் தவறி comment செய்தால்)... 
தனியாக மெயில் அனுப்பினால் சொல்கிறேன். 

3) World Chess Championship 2012 நடந்தது கொண்டிருக்கிறது. ஆனந்த் 
அளவு கடந்த defensive and safe ஆக ஆடுகிறார் என்ற பேச்சு பரவி 
இருப்பதில் தவறு இருப்பதாய் தோன்றவில்லை.
போட்டி இப்போது centre stage ஐ எட்டியுள்ளது. தொடர்ந்து இரண்டு 
ஆட்டங்கள் வெள்ளை காய்களை வைத்து ஆடப் போகும் Gelfand 
அப்படி ஒன்று பெரிய தில்லாலங்கடி எல்லாம் இல்லை.
சொல்லப்போனால் 2010 Topolav கேம்ஸ் ஒப்பிட்டுப் பார்த்தால் காரம் 
குறைவு தான். ஆனந்த் அடுத்த ஆட்டத்தில் தோற்றால் ஒரு வேலை 
சூடு (காரம்) பிடிக்குமோ என்னவோ ! 
குழந்தை வந்த நேரம் ஆனந்த் இந்த முறையும் வெல்லட்டும். 








4) நான் இந்த வருட IPL ஒரு ஆட்டம் கூட பார்க்கவில்லை. அளவுக்கு 
மீறி பிசி பிசி பிசி பிசி பிசி என்பது தான் வேகுமுக்கிய காரணம். 
அப்படியே பார்த்தாலும் இந்த வருடம் சென்னை (My favorite team
for obvious reasons) டீம் ஒன்றும் கில்மா எல்லாம் இல்லை. 
முக்கியமாக மாசிலாமணி, ஒப்பில்லா வைரம், வைடூரியம் திராபை 
ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்தாலே எனக்கு பற்றிக் கொண்டு வரும். 
பாக்கியராஜின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு சீன் வரும் ... அதாவது 
ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்க (கல்யாணம் தான் என்று 
நினைக்கிறேன், அல்லது  வேற விசேஷமா நினைவில்லை ... 
அது இங்கு முக்கியமுமில்லை)
நான்கு வாத்தியார்கள் (பிராமணர்கள்) சென்று கொண்டிருப்பார்கள். 
அன்று வர வேண்டிய ஒரு வாத்தியார் வரவில்லை என்றதால் 
 ஒரு கை குறையும் ...  ஏதாவது பிராமணர் சிக்குகிறாரா என்று 
தேடிக் கொண்டிருக்கும் பொது எதேச்சையாக கண்ணில் 
மாட்டும் பாக்கியராஜிடம் (கதைப்படி அவர் பிராமணர் இல்லை) 
"டேய் நீ பிராமணன்னு பொய் சொல்லிண்டு எங்க கூட வரியா ... 
ஆள் பத்தல ... நூறு ரூபா கிடைக்கும்" என்று சொல்லி அழைத்துக் 
கொண்டு போவர் ... எனக்கென்னவோ ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்தால்
அப்படித் தான் தோன்றும் ... அஷ்வினை விட மொக்கை பௌலிங், 
அஷ்வினை விட மொக்கை பாட்டிங் வைத்துக் கொண்டு இவ்வளவு 
காசு வாங்கும் பொது, பொறாமை எல்லாம் இல்லை, ஆனால் 
சிரிப்பு தான் வருகிறது ... என்ன கர்மமோ ... 

5) ஒரு விஷயம் கவனித்தீர்களா?

ஆ.ராசா 2010 நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். ('ர்' சொல்ல 
வேண்டிய நிர்பந்தம் ... வீட்டிற்குள் 'ன்' தான்) அது முடிந்த மூன்றாவது 
நாள் குரு பெயர்ச்சி. 

கனிமொழி 2011 மே பாதம் கைது செய்யப்பட்டார். அதே வாரத்தில் 
மற்றொரு குரு பெயர்ச்சி. 

கனிமொழி 2011 சனி பெயர்ச்சியை ஒட்டித்தான் பெயிலில் வெளி வந்தார். 

சென்ற வாரம் ஆ.ராசா பெயிலில் வெளி வந்துள்ளார். 
இதோ குரு பெயர்ச்சி வந்துள்ளது. 

ஒரு விஷயம் என்னவென்றால், குரு, சனி இவர்களெல்லாம் ஆட்சி, 
நேர்மை, நியாயம், நீதி இவற்றிற்கு உகந்தவர்கள். நாமெல்லாம் சனி 
என்றால் 'கஷ்டம் கொடுப்பவர், பிரச்சனை கொடுப்பவர், 
நம்ம கதி அம்பேல் தான்' என்று நினைத்தால் அது மிகப் பெரிய 
முட்டாள்தனம்.

சனி ஒரு மிகச் சிறந்த கிரகம் ஆவார். அவர் எதிர்பார்க்கும் மிக 
முக்கிய விஷயம் 'நேர்மை, சுத்தம், நியாயம்,கடமை தவறாமை'. 
இது ஏதாவது given up அல்லது compromise செய்யப்பட்டால் தான் 
அவருக்குக் கோபம் வருகிறது. நளன் (An anicent appatakkar cook) 
பின்காலை தண்ணீர் போட்டு சுத்தம் செய்யாததால் தான்
அவனுக்குப் பிரச்சனை வந்தது. 

இந்த விஷயத்தை ஒரு Big picture (Thanks to my friend raghunath for this word) 
இல் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்.

இந்த குரு பெயர்ச்சி பெரும்பாலானவர்களுக்கு நல்லது தான் செய்யும். 
Be confident and do you duties, period.

Friday, May 4, 2012

Sujatha ...

அமரர் சுஜாதா அவர்களுக்கு இனிய எழுபத்தி ஏழாவது
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .... விரைவில் சுஜாதா
அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

Sunday, April 29, 2012

A sweet digression


இரண்டாவது பதிவாக ஒரு சிறுகதை எழுதத் தான் திட்டமிட்டிருந்தேன்.

சொல்லப் போனால் எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது.
தினமும் அதிகாலை மூன்று மணி வரை ஆபீஸ் வேலை
பார்க்கிறேன் என்பது போக, இப்படி இடைவெளி கிடைத்தால் எழுதுவது
கொஞ்சம் sweet digression எனக் கொள்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன்
(வந்துத் தொல .... ) நேற்றிரவு நடந்த ஒரு சங்கதி (மறுபடியும் இரவா?)
ரொம்பவும் ஸ்வீட் ... (243 mg/dl) அதன் தாக்கத்திலிருந்து வர ஒரு
ப்ளாக் தேவைப் படுகிறது, இதோ இது தான்,பாதி எழுதி முடித்திருந்த
அந்தச் சிறுகதையை பின்னுக்குத் தள்ளி (அல்லது முன்னுக்கா?
pop_front or push_back?) கர்பக்க்ரஹத்தை விட்டு வெளிவந்து விட்டது
இதோ இதோ ...

முதல் பாராவில் எதேச்சையாக யோசித்துக் கொண்டே lexical convention

கொண்டு 'sweet digression' என்று சொல்லிவிட்டேன் ... சரி ... இந்த 'Sweet'
என்பது என்ன ? இனிப்பு, இனிப்பான என சொல்வதில் தொடங்கி, அதைச்
சுவைப்பதில், அதைப் பற்றி பேசுவதில் எல்லாம் ஒரு வித கிளுகிளுப்பு
அடங்கியுள்ளதாக உருவகத் தோற்றப் படுத்தி Universal Context இல் உடன்பட்டு
பிரயோகிக்கிறோம் இனிப்பு எனும் சுவை, பொருள் மற்றும் வார்த்தையை.

இனிப்பு அவ்வளவு இனிப்பான சங்கதியா? பார்ப்போம் ...


சென்ற வருடம் ஆகஸ்ட் தேதியில் தான் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட

அந்த நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக வெளியுலகத்திற்குத்
தெரியவந்தது. பரம்பரை வியாதி, சுக்கிரன் சரியில்லை என்று
அடிப்படைத் தத்துவம் சொல்லி தேத்திக் கொண்டாலும் எல்லாச் சங்கதிக்கும்
ஒரு மூலம் கண்டுபிடிக்காவிடில் எல்லாரும் குகைக்குச சென்று
விட வேண்டியது தான்.

சர்க்கரை வியாதி பரம்பரை வியாதி தான், கண்டிப்பாக 2nd or 3rd

ஜெனரேஷன் வரை விடாது கருப்பு தான் ...சரி எப்படி
அதைக் குணப்படுத்தலாம்? எவ்வளவு நாளாகும்? எதைத் தின்றால்
பித்தம் தெளியும் என்றெல்லாம் குழம்புவதற்கு முன் ஒன்றை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். சர்க்கரை வியாதியை
குணப்படுத்தமுடியாது. Period.

It is not curable. It is preventable to some extent and totally controllable.
முடிந்தால் தடுக்கலாம், வந்தால் கட்டுப்படுத்தலாம்.

பிரச்சனை வந்தால் எப்படி வந்தது, ஏன் வந்தது என்பதை விஞ்ஞான
பூர்வமாக ஆராய்வதில் உள்ள இன்றியமையாத தன்மையை
தவிர்க்க முடியாது. சொல்லபோனால் நம் எல்லாருக்கும் எதோ
ஒரு பிரச்சனை வரக் காத்திருக்கிறது. எப்போது/எதன் அல்லது
யார் மூலம்/எவ்வளவு/ஏன்/எங்கு/என்ன என்பதில் தான் தாயக் கட்டு
சூட்சுமம் அடங்கியிருக்குறது. மரத்துகளில் அல்லது கட்டிலில்
ஒளிந்திருக்கும் மூட்டை பூச்சி மனித வாசத்தை முகர்ந்தால் பல
வருட விரதத்திற்குப் பின் துள்ளி எழுவது போல, ambience (or) 
reasoning base  வரும் போது பிரச்சனை கூப்பிடாமல் Asynchronous 
ஆக சேர்ந்து பல்வேறு dimension இல் வரும்.

சர்க்கரை வியாதியும் ஒரு பூச்சி தான், அது வர நாம் தரும்
ஸ்கோப் உடற்பயிற்சி செய்யாதது, உணவுப் பழக்கம் etc. 
இப்பவே கண்ணக்கட்டுது என்கிறீர்களா? சரி மேல ...

சர்க்கரை வியாதி Type 1, Type 2 என்று இரண்டு வகைப் படும்
என்றெல்லாம் போரடிக்க மாட்டேன் ... நான் மருத்துவனோ
கூகுளோ இல்லை ...

என்னால் முடிந்தது, சர்க்கரை வியாதிக்கு என் சிறு மூளைக்கு
(அல்லது வாய்க்கு) எட்டிய சில  மருத்துவப் பரிகாரங்கள் ...
(பரிகாரங்களை work around என்று மொழி பெயர்க்க இயலுமா?)

1) வெண்டைக்காய் ஜூஸ் ரொம்பவும் நல்லது .... இரவு தூங்கப் போகும்
முன், இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மூன்றாக நறுக்கி
ஒரு டம்ளரில் குடிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
அடுத்த நாள் காலை பல் விளக்கியவுடன் டம்ளரில் உள்ளதை
வடிகட்டி (வெண்டக்காயை சமையலுக்கு உபயோகப் படுத்திக்
கொள்ளலாம்) அந்த ஜூசை உண்ணவும்.

2) குதிரைகள் ஏன் வேகமாக ஓடுகின்றன? எப்படி இப்படி நமீதா போல
நீண்டு அகண்டு இருப்பினும் இவ்வளவு stamina? ஏனென்றால் அவை
கொள்ளு சாப்பிடுகின்றன. கொள்ளு என்பது பண்டைய தமிழில்
ஒரு அளவீடைக் குறிக்கும். குதிரை சாப்பிடும் உணவின் அளவே
உணவிற்கும் அளவிற்கும் பொது unit என்று பிற்காலத்தில்
மருவிவிட்டது. திரும்பவும் அதே பல்லவி தான் ... கொள்ளுப்பயிரை
பொடி செய்து, வறுத்து, உலர்த்தி, காயப் போட்டு காலை
எழுந்தவுடன் தண்ணீரில் கலந்து உண்ணலாம் 

3) வெந்தயப் பொடிக்கும் அதே treatment தான் ... Highly successful combo 
வெந்தயம் + தண்ணீர் + அதிகாலை =ilayaraja + manirathnam + pc.sreeram 

4) இருக்கவே இருக்கிறது பாகற்காய் ...


5) பொதுவாக க்ளுக்கோஸ் குறைந்த எதையும் உண்ணலாம்.
சுக்ரோஸ் பரவாயில்லை. Glycemic Index இல் தான் மாயம்
காத்திருக்கிறது அதனால் தான் தர்பூஸ் போன்ற மிக இனிப்பான
நீர் சத்து பழங்களை உண்டால் கூட பெரிதாக பிரச்சனை
இல்லை. எதுவாக இருந்தாலும் 'அளவுக்கு மீறினால்' is the key phrase. 

6) கண்டிப்பாக தினமும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.
ஓட முடிந்தால் ஓடலாம் ...

7) நோ வாழைப்பழம், நோ தேங்காய், நோ சர்க்கரை, நோ தேன்,
நோ உருளை, நோ கிழங்குகள், முக்கியமாக நோ பச்சரிசி.

இதற்கு மேல் என்ன ம***க்கு வாழ வேண்டுமென்றெல்லாம்
கேட்கப்படாது ... வாழ்வது வேறு ... சுகமாய் வாழ்வது வேறு ...
ஆரோக்கியமாய வாழ்வது வேறு என்றெல்லாம் ஜல்லி அடித்து
பதில் சொல்ல மாட்டேன் ... 

Pleasure and health are not independent parameters and to live is to live. period. 

திரும்பவும் சொல்கிறேன் ... நான் சொன்ன இந்த ஏழு விதிமுறைகள்
are human and implementation specific. சில பேருக்கு ஒத்து வரலாம், சிலருக்கு வேலைக்காகாமல் போகலாம், என் சட்டையை பிடிக்கப்படாது.

சரி ரொம்பவும் இனிப்பு குறைந்த ஒரு ப்ளாகின் முடிவில்
ஒரு ஸ்வீட் ஜோக் (தயவு செய்து சிரிக்கவும், TRP குறைந்து விடும்)

நம்ம அண்ணாச்சிக்கு ரொம்ப நாளா சக்கர வியாதியாம் ...
டாக்டர் நடக்கச் சொன்னதுனால மனசில்லாம ஆடி அசஞ்சு
ரெண்டு கிலோமீட்டர் நடந்தே ஒரு வழியா மெடிகல் ஷாப்
போய்க் கேட்டாராம்

"தம்பி ... சக்கர வியாதிக்கு எதுப்பா நல்லது?"


"எதுவேணா ஒகே தான் பெரியவரே ... வாயில போடாத வரைக்கும்"







Thursday, April 26, 2012

இதோ இந்த இரவில் ....

நாம் மட்டும் நமக்காக நம்முடன் என்று தைரியமாய் 
நம்பி சிலாகிக்கும் உரிமை தரும், ரொம்பவும் அதிதீவிர ஜனநாயக
கிறக்கம் தரும் இந்த இரவு தான் இந்த ப்ளாகின் நாயகன்.
சொல்பவன் கண்ணன், செய்பவன் கண்ணன் போலே,
எழுதுவது இரவில், எழுதுவது இரவைப்பற்றி. Subject 
Object எல்லாம் ஒன்று தான்.பால் கேட்டு அழாத சமர்த்துக்
குழந்தை போல ரொம்பவும் கையடக்கம். அப்படி என்ன செய்து
விட முடியும்? உணர்ச்சிவசப்பட்டு சில்மிஷங்கள் சொல்லப்
போகிறேன் என்றெல்லாம் நினைத்து உமாச்சியைக் கூப்பிட
வேண்டாம். அதைத் தாண்டி சுவாரசியம் நிறைந்த பல
விளையாட்டுகள் செய்யலாம், இதோ இப்படி கையில் ஒரு
லாப்டாப் உள்ளது என்று தான்தோன்றித்தனமாய், ரொம்பவும்
அலட்சியம், அகங்காரம் கொண்டு ப்ளாக் எல்லாம் எழுதலாம், சௌகரியம்.

ரெஹ்மான் இரவில் தான் இசையமைப்பாராம், வாலி,
கண்ணதாசன் போன்றோர் எழுதியதில் பாதிக்கு மேல் இரவுப் பொழுதில்
எழுதியவை தான் (இன்றும் 'பாலும் பழமும்' 'தென் துளி' என்று
பல FM  களில்  வண்டி ஒட்டிக் கொண்டிருக்கின்றன),
இப்படி எல்லாம் சொல்லி நானும் போதி மரத்திற்குக் கீழே
வலுக்காடாயமாஉட்கார்ந்து ஞானம் பெறப் போகிறேன்
என்றெல்லாம் ஜல்லி அடிக்க விரும்பவில்லை. I just love night, period.  

சரி மேலே போ என்று சொன்னால் அப்படி எல்லாம்
ஒன்றுமில்லை, இந்த முதல் ப்ளாகை இதோ நான் மிகவும்
விரும்பும் உயிர், பொருள், குறியீடு, மதிப்பீடு, அளவீடு அற்ற
காலம் எனும் இரவுக்காக இரவில் அர்ப்பணித்து எழுதுவதில்
ஒரு வித நன்றி உணர்ச்சி கூட மிகுவதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

எவ்வளவு இளையராஜா பாடல்கள் (Stating the obvious) ,

ரெஹ்மான் பாடல்கள் (Yes, I like Arr too for taste does not have to be binary
even if considered  superficially mandatory by the outward world), வித்யாசாகர்
பாடல்கள் (இரவில் தேவதை வம்சம் நீயோ அல்லது அன்பே 
அன்பே நீ என் பிள்ளை இதில் ஏதாவது கேட்டுப் பாருங்கள்) 
என்று கேட்டுத்தள்ளியிருப்பேன் ... எவ்வளவு
சுஜாதா, பாலகுமாரன் நாவல்கள் படித்திருப்பேன் ...
எவ்வளவு மொக்கை கதை, கவிதை (இப்போது ப்ளாக்) எல்லாம்
எழுதித் தள்ளி இருப்பேன் (தள்ளி என்பதை contextual meaning கொண்டு
அர்த்தம் கொண்டால் உங்கள் வீட்டில் நாளை கரண்ட் போகாமல்
யாராவது பார்த்துக் கொள்வார்கள்).

கதை, கவிதை எழுதுவதில் பெரிய இடைவெளி ஏற்பட்டு
விட்டதாக, தயவு செய்து கதை எழுதி அனுப்புங்கள் என்று
பெரிய ரசிகர் கூட்டம் (மொத்தம் ரெண்டு பேர், என்னையும் சேர்த்து)
மெயில் அனுப்பி என் மெயில் பாக்சை ஸ்பாம் செய்வது
போலெல்லாம் சௌகரிய கற்பனை செய்து, காலத்தின்
கட்டாயத்தால் (???), சமுதாய முன்னேற்றம் வேண்டி (முடியல ... )
இனி ப்ளாக எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்
(இனி செத்தோம் என்று நினைப்பவர்கள் ஓடி விடுங்கள்)

பார்ப்போம் இந்த முயற்சி எப்படி இருக்கிறதென்று ...
பொழுது போகவேண்டாமா, எனக்கும் உங்களுக்கும்

சரி முடிக்கும் முன் ஒரு கவிதை



ஆடை விலகிய பெண்
ஒரே ஒரு இரவு
என்ன செய்தால் அவள் சுகிப்பாள்?
இப்படிச் செய்யலாமா அப்படிச் செய்யலாமா
என எண்ணுங்கால்
இதோ இந்த இரவு
ஆஷ் ட்ரே நிரம்புகிறது ...
ஒரு பியர் அடிக்கிறேன் 
அடங்கவில்லை காமமும் வியர்வையும்
இன்னும் ஒரு பியர் ...
போதாது மேலே போ
உள்ளே எரியும் எனக்காக
வெளியில் அணையும்
இந்த சிகரட்டுடன் தூங்கிப் போகிறேன் ...
எனக்கும் தெரியாமல்
காற்றில் லேசாய்
அவள் உடை விலகுகிறது
இன்னமும் இன்னமும் இன்னமும் ...